சென்னை, டிச. 16- தென்னிந்தி யாவின் மிகப்பெரிய நோய றிதல் சேவை வழங்குநர்களில் ஒருவரான மெடால் ஹெல்த் கேர் நிறுவனம், சென்னையில் அதன் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை விலையை பரிசோதனை மய் யத்தில் ரூ .999 ஆகவும், வீட் டில் 1,399 ஆகவும் குறைத்து உள்ளது. மேலும் ரூ.4999 முதல் ரூ.8999 வரை விலை கொண்ட ஆர்.டி பி.சி.ஆர், மார்பு சி.டி ஸ்கேன், சிறப்பு வாய்ந்த இரத்த பரிசோதனை கள் மற்றும் பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகளுக்கான விரிவான கோவிட் சோதனை தொகுப்பு களையும் வெளியிட்டது.
இது குறித்து இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் அனந்த் கூறுகையில், நோய் தொற்று குறைந்து, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் பட்சதில் நாம் அனைவரும் இந்த கட்டத்தை ஒன்றாகக் கடக்க முடிந்தால், அது நம் அனைவருக்கும் நல் லது. ஆரம்ப நிலையிலேயே ஒருவர் பரிசோதனை செய்து நோய் தொற்றை கண்டறிந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதும் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கும் முக்கியமா னது. மேலும் இது காய்ச்சல் அறிகுறிகள் உயரத் தொடங் கும் பருவம் என்பதால் இந்த சோதனைகள் எங்கும் பர வலாக நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவிக் கப்பட்டுள்ளது. சுகாதார வல் லுநர்கள் சரியான மதிப் பீட்டை ஆரம்பத்தில் செய்ய உதவுவதற்கும், பின்னர் ஏற் படும் சிக்கல்களைத் தவிர்ப்ப தற்கும் இந்த விரிவான தொகுப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
No comments:
Post a Comment