சென்னை, டிச. 27- இந்தியாவில் புரதக் குறைபாடு மற்றும் புரதத்தைப் பற்றிய விழிப்புணர்வின் அளவைக் கண்டறிய இந்திய சந்தை ஆராய்ச்சி பணியகம் (அய்.எம்.ஆர்.பி) நடத்திய ஆய்வில், நகர்ப்புற பணக்காரர்களில் 73 சதவீதம் பேர் புரதக் குறைபாடுடையவர்களாக இருப்பதைக் காட்டியது, அவர்களில் 93 சதவீதம் பேர் தங்கள் அன்றாட புரதத் தேவைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
கரோனா
கோவிட்-19 நோய் தொற்றை தடுக்க இந்தியர்களின் உணவு தேவைகளில் சமமாகப் பரப்புவதன் மூலம் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று உணவு ஆலோசகர் அதிதி மெஹ்ரோத்ரா கூறுகிறார். இதன் பொருள் பால், பருப்பு வகைகள் மற்றும் பருப்பு வகைகள், தினை, கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்து போன்ற நிலையான தானியங்கள், முட்டை மற்றும் கோழி போன்றவற்றை இணைப்பதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமுறைக்கான வேளாண் தொழில்நுட்ப மின்சார வாகனம்
சென்னை,
டிச. 27- இந்தியாவின் அதிவேக வளர்ச்சி கொண்ட டிராக்டர் தயாரிப்பாளரும், அய்ரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளின் 130க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, இந்தியாவின் முதல்நிலை ஏற்றுமதியாளராக திகழ்வதுமான சோனாலிகா டிராக்டர் (Sonalika Tractor), தற்போது - அடுத்த தலைமுறை வேளாண் தொழில்நுட்பமான - மின்சாரத்தில் இயங்கும் “டைகர் - எலெக்ட்ரிக்” (Tiger Electric) என்ற புது மாடல் டிராக்டரை அறிமுகம் செய்ய உள்ளது.
சோனாலிகா
நிறுவனத்தின் புதிய படைப்பு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அதன் செயல் இயக்குனர் ரமன் மிட்டல், “எங்களது நிறுவனம் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் எப்போதுமே முன்னணியில் நிற்கும். அதனால், அமெரிக்க, அய்ரோப்பிய நாடு கள் உட்பட உலக விவசாயப் பெருமக்கள் அனை வருக்கும் ஆகச் சிறந்த தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ‘தொழில் நுட்ப மாற்றங்களின் உச்சங்களைக் கொண்டு வந்து இந்திய விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கு வோம்’ என, நாங்கள் ஏற்கெனவே அளித்திருந்த வாக்குறுதியின்படி, தற்போது இந்த டைகர் எலெக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment