தமிழ்ச் சமுதாயத்தை மறுமலர்ச்சி அடைய மகத் தான பணியை மேற்கொண் டவர் தந்தை பெரியார். அவர் பிறவாதிருந் தால், சமு தாயத்தில் சமயச்சீர்கேடுகள் நீங்கி இருக்காது, மனிதம் பூத்திருக்காது, பகுத் தறிவு வளர்ந்திருக்காது. இதனைச் சுட்டிக் காட்டும் விதத்தில் புலவர் குழந்தை பெரியா ரின் பகுத்தறிவுச் செயல்பாட்டை
“பேடைக்குயிலின் மொழியே நம்
பெரியார் பிறவா திருந்திருந்தால்
மூடப்பழக்க வழக்கமெனும்
முரட்டுக் களிறு முதுகிட்டே
ஆடிக்காற்றின் அலர் பூளை
யாமென் றோடத் தமிழ்மக்கள்
கூடிக் குலவிப் புதுவாழ்வு
கூடியுவத்தல் கூடுங்கொல்”
-என்று பாடியிருப்பார்.
காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஒத்துழைப்பை நல்கியவர், நெல்லை காங்கிரசுக் கூட்டத்தில், வகுப்புரி மைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர், ஈரோட்டிலே கள்ளுக்கடை மறியலைத் தலைமைத் தாங்கி நடத்தித் தன் பரந்த தோப்புகளில் தாதம்பட்டியில் இருந்த 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர், காந்தியின் நிர்மாணத் திட்டத்தைச் சிரமேற்கொண்டு நடத்தியவர், வீதி, வீதியாகச் சென்று தீவிரமாகக் கதர்ப் பிரச்சாரம் செய்தவர், தஞ்சை காங்கிரசில் - மீண்டும் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர், மதுவிலக்கு கொள் கையை - நிலைநாட்ட கள்ளுக்கடை மறிய லில் ஈடுபட்டுச் சிறைக் கொட்டடிகளில் அடைப்பட்டுக் கிடந்தவர்.
இப்படித்தான் காங்கிரசு கட்சியில் பெரியார் அவர்கள் இருந்தது பற்றி வரலாறு அடையாளப் படுத்திப் பேசுகிறது.
1923-இல் தமிழ்நாடு காங்கிரசுத் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரியார் முதன் முதலாக பிராமணரல்லாதவராகப் பொறுப்பேற்றபோது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர், வ.வே.சு.அய்யர் ('விடுதலை', 6.1.1960) என்ற பார்ப்பனர் ஆவார். காங்கிரசு கமிட்டித் தலைவரான பின்பும், வகுப்புரி மைக் கோரிக்கையைக் கைவிடாமல், சமூக நீதிக் காவலராக இருந்து போராடியவர்.
1924ஆம் ஆண்டில் மூன்று முக்கிய நட வடிக்கைகளை மேற்கொண்டார் பெரியார். (1) கேரளாவில் வைக்கம் மகாதேவர் கோயில் முன் தீண்டாமை ஒழிப்புப் போரில் ஈடுபட்டு, இருமுறை சிறைகண்டு வைக்கம் வீரர் என்று பாராட்டப்பட்டார். (2) திரு வண்ணாமலை காங்கிரசு கூட்டத்தில் வகுப்புரிமைத்தீர்மானத்தை முன்மொழிந்து உணர்ச்சி உரை நிகழ்த்தினார் (3) சேரன் மாதேவியில் வ.வே.சு.அய்யர் காங்கிரசு ஆதரவுடன் தொடங்கிய குருகுலத்தில் பிராமணர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மாண வர்களுக்கும் தனித்தனியாக உணவு அளிக் கப்பட்ட அநீதியை வன்மையாகக் கண்டித் ததுடன், மனித உரிமையை மண்ணுலகம் பெற நின்றவர்தான் பெரியார்.
இதன்பின்னர் 1925 நவம்பர் 25ஆம் தேதியில் நடந்த காஞ்சிபுர காங்கிரசு மாநாட்டில், வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, அத்தீர்மானத்தை ஏற்கப்படாமையால், காங்கிரசைவிட்டு வரும், அவரின் ஆதரவாளர்களும் வெளி யேறினார்கள். அப்படி வெளி யேறிய நேரத்தில்தான்,
"ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) வகுப்பு வாரி இட ஒதுக்கீடு உரிமை யைப் பெற்றால் ஒழிய, பார்ப் பனர் மேலாதிக்கத்தை ஒழிக் கவே முடியாது, திராவிட இனத் தவர் பிராமணோக்கிரசி என் னும் பார்ப்பணீயக் கொடுங் கோல் ஆட்சியில் துன்பப்படத் தான் வேண்டும்" என்று ஒரு புதிய சொல் லாட்சியைச் கூறி எச்சரிக்கை விடுத்து சேலம் நகர் கூட்டத்தில் அம்பலப்படுத்திய அரியதோர் அடலேறு தான் அவர்.
காங்கிரசை விட்டுத்தனிச் சுயமரியாதை இயக்கம் கண்டபோது, பிராமண ஆதிக் கத்தை ஒழிப்பது, திராவிட மக்களின் பாரம் பரியத்தின் உயர்வை மக்களிடையே பரப்புரை மூலம் விளக்குவது, பிராமணிய கருத்துகளால் படைக்கப்பட்ட கட்டுக்கதை கள், மூட நம்பிக்கைகளைக் கொண்ட புராணங்கள், இதிகாசங்களை விமர்சனம் செய்வது என மேடைகளையும், ஏடுகளை யும் பயன்படுத்தி வந்தார்.
பெரியார் சுயமரியாதை இயக்கம் தோற் றுவிக்கும் முன்பே வெளிநாடுகளிலுள்ள லண்டன் பகுத்தறிவாளர் சங்கர் (RDA), அமெரிக்க சுதந்திர சிந்தனையாளர் அமைப்பு (Free thinkers Association), இரஷ்ய கடவுள் எதிர்ப்புச் சங்கம் (Anti God Society), சீன இளைஞர் சங்கம் (Young Chinese) என்பன போன்றவற்றை அறிந் திருந்தார். அத்துடன் ஆப்கானிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளிலும் நடந்து வந்த சுயமரியாதைப் பரப்புரைகள் பெரியாருக்கு மிகவும் உந்து சக்திகளாக இருந்தன.
சுயமரியாதையை உயிராகக் கருதிய பெரியார், "சுயமரியாதையற்றவனைப் பிண மாகக் கருதவேண்டும்" என்று சாடினார்.`
சமத்துவம், சமஉரிமை, சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் இவற்றில் சுய மரியாதையைக் கண்டார் அவர். எனினும், மூடநம்பிக்கை, குருட்டுப் பழக்க வழக் கங்கள், தீண்டாமை, பெண் அடிமை போன் றவற்றைக் கண்டிப்பது என்பது மட்டுமல்ல, அவற்றைக் களை எடுக்கவும் துணிந்து, கடுமையாகப் பகுத்தறிவுக் களைக்கொட்டு வுடன் அலைந்து பாடுபட்டார்.
பிராமணரல்லாதார் அனைவருக்கும் சமத்துவத்தையும், உரிமைகளையும், சம வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் நீதிக்கட்சி, "பிராம ணர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்வது எனும் முடிவைத் தேன்கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டது போன்றது என்றும், இந்த இயக்கம் செத்து பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாக மாறி விடும்" என்றும் அச்சப்பட்டார். அக்கட்சி யின் சமூக நீதிக்கொள்கை சார்ந்த நடவடிக் கைகளை ஆதரித்தே வந்தார். எனினும், நீதிக்கட்சியை "உத்தியோக வேட்டைக் கட் சியாகக் கருதி, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
1926 டிசம்பர் மாதம் மதுரையில் பிராம ணரல்லாதார் முதல் மாநாட்டைக் கூட்டிப் பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினைகளையும், காங்கிரசின் இந்தித் திணிப்புக் கொள்கை களையும் பேசியதோடு, சீர்திருத்தப் பணி களில் ஈடுபட்டு வந்தார்.
(அடுத்த வாரம் தொடரும்)

No comments:
Post a Comment