பெரியாரைக் கண்டு நடுங்கும் இந்துத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 24, 2020

பெரியாரைக் கண்டு நடுங்கும் இந்துத்துவம்

 இரு விலங்குகளுக்குள்

ஜாதிய பேதமில்லை

இரு பறவைகளுக்குள்

பாலின பேதமில்லை

 

பேதங்களை மூலதனமாக்கி

மானுட சமூகத்தில்

பார்ப்பனியம் தொடங்கிய

பெருந்தொழிலே இந்துத்துவம்

 

சனாதனத்தை காரணம் காட்டி

சமத்துவமின்மையால்

கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவம்

 

ஆண்டாண்டு காலமாய்

தொடர்ந்த இந்துத்துவ மரபுகளை

தன் கேள்விக் கணைகளால்

துளைத்தெடுத்தவர் பெரியார்!

 

எதிர் கேள்வி கேட்கிறவர்களை

வரலாறு நெடுக

கொன்று குவித்த இந்துத்துவம்

முதன் முறையாய் மண்டியிட்டது

பெரியாரிடம் தான்

 

இந்துத்துவத்தின்

மொழித் திணிப்பிற்கு எதிராய்

தார்ச் சட்டி தூக்கினார்

தமிழ்மொழி காக்க!

 

இந்துத்துவத்தின்

ஜாதிக்கு எதிராய்

அரசியல் சட்டப் பிரிவை

சாம்பலாக்கினார் இந்துத்துவத்தின்

தீண்டாமைக்கு எதிராய்

சமபந்தி விருந்து நடத்தினார்

 

இந்துத்துவத்தின்

பாலினப் பாகுபாட்டிற்கு எதிராய்

கல்வியும் சொத்துரிமையும்

பெண்களுக்கு வேண்டுமென்றார்!

 

இந்துத்துவத்தின்

வர்ண ஆதிக்கம் ஒழிக்க

அனைத்து ஜாதியினரும்

அர்ச்சகராக வேண்டுமென்றார்

 

இந்துத்துவத்தின்

கலாச்சாரத் திணிப்பிற்கு எதிராய்

சுயமரியாதைத் திருமணங்களை

நடத்தச் செய்தார்

 

அன்று

பெரியாரைக் கண்டு நடுங்கிய இந்துத்துவம்

இன்று

அவர் சிலைகளைக்கண்டு

நடுங்கிக் கொண்டிருக்கிறது ..

- பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment