கேரளா உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

கேரளா உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி

திருவனந்தபுரம்,டிச.16, கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8-ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப் புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணா குளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ஆம் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள் ளாட்சி தேர்தல் நடந்தது.

இதில் பொதுமக்கள் ஆர்வத் துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித் தனர். அதன்படி 8-ஆம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், 10-ஆம் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதமும், 14-ஆம் தேதி நடந்த 3-ஆவது கட்ட தேர்தலில் 76.4 சதவீத வாக்குகளும் பதிவானது.

தபால் ஓட்டுகள் என்று சேர்த்து 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் பயன்படுத்தப் பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கேரளாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 244 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (16.12.2020) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 6 மாநகராட்சிகள், 8 நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட தேர்தல் முடிவு களில் 383 கிராம பஞ்சாயத்துகள், 93 தொகுதி பஞ்சாயத்து மற்றும் 10 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 3 மாநகராட்சிகளில்  ஆளும் கம் யூனிஸ்ட் கட்சி(இடது ஜனநாயக முன்னணி)   முன்னணியில் உள்ளது.

எர்ணாகுளத்தில் கோத்தமங் கலம், பரவூர் மற்றும் வைப்பீன் ஆகிய மூன்று தொகுதி பஞ்சாயத் துகளில் மட்டுமே இடது ஜனநாயக முன்னணி  முன்னிலை வகிக்கிறது. மீதமுள்ள 10 தொகுதி பஞ்சாயத்து களில் காங்கிரசின் அய்க்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை வகிக்கிறது.

மலப்புரத்தில் 58 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 9 நகராட்சி களில் அய்க்கிய ஜனநாயக முன் னணி முன்னணியில் உள்ளது

கொச்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் என் வேணுகோபால்,  நார்த் அய்லேண்ட் வார்டில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வேட் பாளரிடம்  தோல்வியடைந்துள்ளார்.

No comments:

Post a Comment