தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை,டிச.16, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.

கடந்த மாதம் 24-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலும், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் அடுத்து உருவான புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் கொட்டியது. அதன்பின், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் என்.புவியரசன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்  என தெரிவித்தார்.

No comments:

Post a Comment