மனித வதைக்குத் தடையில்லை
கருநாடகாவில்
பசுவதைத் தடைச் சட்டம் - தடையை மீறினால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!
மதத்தின்
பெயரால் மனித வதைக்கு மட்டும் தாராள லைசென்சு உண்டு இந்த நாட்டில்.
வெளியேற்றம்
கூகுள்
நிறுவனத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் டிம்னி கெட்ரு என்ற பெண் வெளியேறினார்.
இவர்
கருப்பினப் பெண் ஆராய்ச்சியாளர் என்பதால் கூகுள் நிறுவனம் அவரைப் பழி வாங்கியதாம்.
பூணூல்தனம்
அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதோ!
ஏமாறுகிறவர்களும்!
பொதுமக்களிடம்
நிலம் வாங்கித் தருவதாக ரூ.1,100 கோடி சுருட்டிய மெகா மோசடி கும்பல் கைது.
இதுபோன்ற
மோசடிகள்பற்றி (சீட்டுக் கம்பெனிகள் உள்பட) செய்திகள் ஏராளம் வந்து கொண்டிருந்தாலும், மோசடிக்காரர்களிடம் ஏமாறும் மக்களும் ஏராளம் இருக்கத்தானே செய்கிறார்கள், என்ன செய்வது!
குதிரைக்குமுன்
வண்டியா?
700 மாவட்ட
விவசாயிகளை சந்தித்து புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் கூறத் திட்டமிட்டுள்ளது மத்திய பி.ஜே.பி.
அரசு.
இந்தச்
சட்டங்களை இயற்றுமுன் அல்லவா விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசித்திருக்க வேண்டும். வண்டிக்குமுன் குதிரையா - குதிரைக்குமுன் வண்டியா?
யாரைத்தான்
நம்புவதோ!
சென்னை
தனியார் நிறுவனத்தில் சி.பி.அய்.
பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயம்.
வங்கி
லாக்கரில் வைத்தாலும், சி.பி.அய்.
பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைத்தாலும் பாதுகாப்பு இல்லை - யாரைத்தான் நம்புவதோ!?
No comments:
Post a Comment