மராட்டிய
மாநிலத்தைச் சார்ந்த அமெரிக்காவில் வாழும் சமூக அக்கறையாளர்கள் மராட்டிய அறக்கட்டளை (Maharashtra Foundation) எனும் அமைப்பினை நடத்தி வருகின்றனர். பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளியுமான டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவினைப் போற்றி விருது வழங்கி வருகின்றனர்.
2020-ஆம்
ஆண்டுக்கான நரேந்திர தபோல்கர் விருதினை திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்க இருப்பதாக மராட்டிய அறக்கட்டளை அறிவித்துள்ளது. விருது வழங்குவதற்கான தெரிவுக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் டாக்டர் ஹமீத் தபோல்கர் (போராளி நரேந்திர தபோல்கரின் மகன்) நரேந்திர தபோல்கர் நினைவு விருதுக்கு தமிழர் தலைவர் தெரிவு செய்யப்பட்ட செய்தியினை தெரிவித்துள்ளார்.
தமிழர்
தலைவருக்கு விருது வழங்கிட உள்ள செய்தியினை நேற்று (11.12.2020) மின்னஞ்சல் மூலம் அனுப்பி விட்டு தொலைபேசி வாயிலாகவும் தமிழர் தலைவரிடம் பேசினார்.
விருதுக்கான
தெரிவிற்கு தமிழர் தலைவரின் ஒப்புதலை பெற்றுள்ள டாக்டர் ஹமீத் தபோல்கர் விருது வழங்கப்படும் நிகழ்வு - இணையவழி நிகழ்வாக 2021 ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துள்ளார்.
கடந்த
காலங்களில் பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு பாடுபட்ட அமைப்புகளுக்கு நரேந்திர தபோல்கர் நினைவு விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், அப்படிப்பட்ட சமூக அமைப்பின் தலைவருக்கு, முதல்முறையாக விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர
தபோல்கர் நினைவு விருதுப் பட்டயத்துடன் (citation) ரூபாய்
ஒரு லட்சத்திற்கான பணத்தொகையும் வழங்கப்படுகிறது.
விருது
வழங்கப்படுவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழர் தலைவர் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் போராளி நரேந்திர தபோல்கர் நினைவு விருது வழங்கப்படுவது தனக்கு தனிப்பட்டதாகக் கருத முடியாது; வாழ்நாள் முழுவதும் மானுட மேம்பாட்டுக்குப் பாடுபட்ட பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்கும், அவர் நிறுவிய திராவிடர் கழகம் எனும் சமூக அமைப்பிற்கும், அதன் தோழர்களுக்கும் வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.
தெரிவுக்குழுத்
தலைவரின் கடிதம்
Respected Mr K.Veeramani
My name is Dr. Hamid Dabholkar. I am son of late Dr.Narendra Dabholkar and activist of Maharashtra Andhshradhaa Nirmulan Samitee(MANS) a rationalist movement in Maharashtra.
I am writing this letter to you as co-ordinator of selection committee for Dr. Narendra Dabholkar Award bestowed in memory of Dr. Narendra Dabholkar by our sister concern organisation named Maharashtra Foundation. After brutal assassination of Dr. Narendra Dabholkar, Maharashtra Foundation has started an Award in his memory. This is seventh year of this Award.
Our selection committee has unanimously agreed on your name for the Award this year.
The Award includes Rs. One Lakh and Memento.This year due to COVID pandemic, the Award will be handed over in an online ceremony in the second week of January 2021.
Maharashtra Foundation is an organization founded by well wishers of Maharashtra from USA . Dr Dabholkar was closely associated with work of Maharashtra Foundation and used to organize their yearly program in Maharashtra .
Earier the Award was bestowed to Tarkshil Society Punjab and Kerala Shastrya and Sahitya Parishad.
It will be a great honour if you agree to accept this award .Waiting eagerly for your response.
I do not have your contact number. It will be a great help if you can share your contact number.
Regards
Hamid Dabholkar
Co-ordinator,
Dr.Narendra Dabholkar Award Committee,
Maharashtra Foundation

No comments:
Post a Comment