தமிழர் சமுதாயத்தைப் பிடித்துள்ள மூன்று பேய்களையும் அய்ந்து நோய் களைப் பற்றியும் குறிப்பிட்டார். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 19.5.1962 ஆம் நாளன்று உரையாற்றும் போது குறிப் பிட்டார்.பேய்கள் - கடவுள், மதமும் ஜாதி யும், ஜனநாயகம் ஆகியன. நோய்கள் - பார்ப்பனர், பத்திரிகைகள், சட்டசபை, அரசியல் கட்சிகள், சினிமா ஆகியவை.
அவரே சொல்லிவிட்டார், பேய்கள் என்பவை உண்மையில் இல்லாதவை. என்றாலும் அவை இருப்பதாகப் பலரும் கருதிக் கொண்டு, பயப்பட்டுத் தொல்லைப் படுகிறார்கள் என்பதை. கடவுள் என்பதாக ஒன்று கிடையாது. கடவுளைப் பரப்பிப் பிழைக்கும் வழியாக்கிட மதம் என்பதைக் கற்பித்துள்ளனர். மதநூல்களில் கூறப்பட் டது எனக் கற்பித்து ஜாதிகளை உண்டாக் கினர். இதனையும் படிநிலையில் அமைத்து மேல், கீழ் என்று ஆக்கினர். அடுக்கு ஆதிக் கம் எனும் வகையில், உயர்ந்த இடத்தில் உட்கார வைக்கப்பட்ட பார்ப்பனர் பிறஜாதி மக்களைக் கொடுமையான மேலாதிக்கம் செய்து வருகின்றனர். இந்த ஜாதி இந்திய மக்களிடையே, அதுவும் இந்து மதத்த வரிடம் மட்டுமே உள்ளது. அதுபோலவே, ஜனநாயகம் என்பதிலும், பதவியில் அமர்ந் துள்ள ஒரு குழுவினரின் ஆதிக்கமே நிலவு கின்றது. என்றாலும் மக்களாட்சி என்கிறார் கள். இது ஒரு மாயை. 51 பேர்கள் சொல்வதை, செய்வதை 49 பேர்கள் தலையாட்டி ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை. இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் செயல் படும் தான்தோன்றித் தனச் செயல்பாடுகளே எடுத்துக்காட்டுகள். சரியான அறிவின்றி, அனுபவமின்றி, எவ்வித வாதத்திற்கும் வழி யின்றி, பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு முரணாக ஆமாம் சாமிகள் கை உயர்த்தியும், மேல்சபையில் அதுவுமின்றி குரல் கொடுத் தும் நிறைவேற்றப்பட்டதாக மூன்று சட்டங் களால் நேரிடையாகப் பாதிக்கப்படும் உழ குடி மக்கள் வீதியில் கிடக்கின்றனர். எதற் காக என்று கேட்பதற்கும் யாரும் இல்லாத் துரைத்தனம் - இதன் பெயரா மக்களாட்சி? ஜனநாயகம்? எனவே, மூன்றுமே பேய்கள் தான். இல்லாதவைதான். முட்டாள்தன மாகத் தொல்லைப்பட்டுக் கொண்டு இருப் பவைதான். பெரியார் சரியாய்த்தான் சொன் னார் என்பதை அனுபவங்கள் நமக்கு உணர்த்திவிட்டன.
அடுத்து நோய்கள். பார்ப்பனரும் பத்திரிகை ஒன்றே எனக் கருதும்படியாக நம் நாட்டு நடப்புகள் உள்ளன. எல்லாப் பத்திரிகைகளும் பார்ப்பனர் பனியாக் களால் நடத்தப்படுகின்றன. யார் முதல் போட்டு நடத்தினாலும் கருத்துகளை எழுதுபவர்களாகப் பார்ப்பனர்களே இருக் கின்றார்கள். ஜாதித் திமிரும் பணத்திமிரும் சேர்ந்து கொண்டு ஜனநாயகத்தின் நான் காம் தூணை ஆட்டி வைக்கின்றன. தமிழ் நாட்டில், பெரிய ஏடுகள் எனப்படுபவை விற்பனை அடிப்படையில் தீர்மானிக்கப்படு கின்றன. எனவே, அதிகம் விற்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சிப் பாடலுக்குப் பக்கவாத்தியக்காரர்களாக ஏடுகள் ஒத்து ஊதுகின்றன. தோன்றிய காலம் தொட்டு அதே நிலைப்பாடு ஓர் ஏட்டுக்கு பணமே. குறிக்கோள் என்றான பிறகு... கொள்கை குறிக்கோள் பற்றியெல்லாம் பேசக்கூடாது. தேசிய ஏடுகள் என எழுதிவைத்துக் கொண்டு, ஓரஞ்சாராமல் நடுநிலையோடு எழுதுவதாகப் பொய் எழுதிக் கொண்டு உயர்ஜாதி நலனுக்காக மட்டுமே செயல் படும் ஏடுகள். பத்து விழுக்காடு மக்களின் நலனுக்காக மட்டுமே எழுதும் ஏடுகளாகத் தினமணி, தினமலர் போன்றவை ஆர்.எஸ்.எஸ். மீசைப் பார்ப்பனர் எழுதும் ஏடு, தமிழ் மொழிக்காகச் சர்வபரித் தியாகம் செய்வார் போன்ற தோற்றத்தைப் பூசிக் கொண்டு திருக்குறளைக் கேவலப்படுத்து கிறது. விரிநூல் அறிவு அறவே அற்ற, புரி நூல் பார்ப்பன ஏடு தினமலர் தனது தமிழர் விரோதத்தை, பார்ப்பனரின் குரோதத்தை வெளிப்படையாகவே காட்டிக் கொள்கிறது.
பார்ப்பனர் பேசும் முற்போக்கு, பொய். அது அவர்களுக்கு ஒரு முகமூடி. முற் போக்கு பேசிய பல பார்ப்பனர்களைப் பார்த்த அனுபவம் உண்டு என்பதால்தான், வைதீகப் பார்ப்பனரை நம்பினாலும் லவுகீகப் பார்ப்பனரை நம்பக் கூடாது என்றனர் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும். பார்ப்பனர் நலன் ஒன்றே குறியாகக் கொண்டு தொடங்கப்பட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு தமிழால் இணைவோம்" என்ற முகமூடி அணிந்து அவதாரம் எடுத்தது. இந்து தமிழ் திசை என்ற பெயரில் ஏடு நடத்துகிறது. என்ன அதன் செயல்பாடு? அறிஞர் அண்ணா பற்றி ஒரு "தலையணை நூல், மாபெரும் தமிழ்க்கனவு. நம் தோழர்கள் அகமகிழ்ந்த னர். அடுத்து ஒன்று. கலைஞர் பற்றி, தெற் கில் ஒரு சூரியன். உச்சி குளிர்ந்தது நமக்கு". மூன்றாவதாக நடிகரின் சினிமாப் பெயரில். முகப் பூச்சு கலைந்துவிட்டது. அரிதாரம் கரைந்து ஒழுகிக் காணச் சகிக்கவில்லை. பார்ப்பனர் தமிழ்போற்றும் இலட்சணம் இதுதான். எந்தப் பார்ப்பனரும் தமிழைத் தாய்மொழி என ஏற்றுக் கொண்டதில்லை. அதே வேளையில் சமஸ்கிருதம் எனச் சொல்லும் துணிவுமில்லை. இவர்களைத் தான் புரட்சிக்கவிஞர் வடமொழியால் வாழா நாய்கள் என்றார். தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டபோது மகிழாதவர் கள் மட்டுமல்லாமல், நையாண்டி செய்த வர்கள்.
உலகம் முழுவதிலுமுள்ள மக்களில் தாய்நாடு என ஒன்று இல்லாதவர்கள் பார்ப் பனர்களும் யூதர்களுமே. இரண்டாம் உலகப் போருக்குப்பின் யூதர்களுக்காவது இஸ் ரேல் கிடைத்தது. ஆரியப் பார்ப்ப னர்க்கு எதுவும் இல்லை. இந்த இரண்டு இனத்தவர் தாய்நாடு என்று கூடச் சொல்வ தில்லை. தந்தை நாடு என்றுதான் சொல்லிக் கொள்வர். இரு இனமும் நாடோடிகள். அலை குடியினர். ஆண்கள் மட்டுமே மாடு மேய்த்துக் கொண்டு அலைந்து திரிந்த வர்கள். அங்கங்கே இருந்த பெண்களைக் கூடிக் குடும்பம் நடத்தியதால் பெண்டிரை மதிப்ப தில்லை. ஆணாதிக்கத் திமிர் கொண்டவர்கள். இல்லாத கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்றும் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் யூதர்கள் கூறிக் கொள்வர். அதுபோலவே பார்ப்பனர்கள் ஜாதிகளை ஏற்படுத்தி அதன் உச்சியில் உட்கார்ந்து கொண்டு ஏனைய மக்களை இழிவாக நடத்துபவர்கள். ஆகவே இவர்கள் மானுட சமுதாயத்தின் நோய்கள்.
உலகம் முழுவதுமே மன்னராட்சி நிலவிய காலம் இருந்தது. சொல்லமுடியாத கொடுமைகளை மக்கள் அனுபவித்தனர். அல்லற்பட்டு ஆற்றாத கண்ணீர் அளவு கடந்து போனதால் மக்களின் எழுச்சி - அதன் விளைவாகப் புரட்சி. முதலில் பிரான்ஸ் நாட்டில் வெடித்த புரட்சியால் மன்னர்களும், பிரபுக்களும் கொல்லப்பட் டனர். மக்களாட்சி மலர்ந்தது. தொடர்ந்து பல்வேறு நாட்டு மக்களிடையேயும் எழுச்சி, கிளர்ச்சி. விளைவாக முடியாட்சி முடிந்தது. குடி யாட்சி ஏற்பட்டது. மக்களின் பிரதிநிதிகள் கூடிப் பேசி, முடிவெடுத்து அதன்படி நடக்கும் ஆட்சி ஏற்பட்டது. சில நாடுகளில் மன்னர்கள் இருந்தாலும் அதிகாரம் ஏதும் அற்றவர்களாக அலங் காரமாக அமர வைக்கப்பட்டுள்ளனர். குடிக்கோனாட்சி என்றார் அறிஞர் அண்ணா, அத்தகைய மக்களாட்சியின் அங்கங்களாக சுதந்திரமான நீதித்துறை, நிருவாகத்துறை, இவற்றிற்கு வழிகாட்டும் சட்டங்களை இயற்றும் அதிகாரம்பெற்ற சட்டசபை என மூன்று தூண்கள். இவற்றின் செயல்பாடுகளை உன்னிப்பாக உற்று நோக்கி, தவறு கண்டால் தட்டிக்கேட்டும் சுட்டிக்காட்டியும் கடமை ஆற்றிடும் பெரும் பொறுப்பு கொண்ட பத்திரிகைகள் நான்காம் தூணாக. அந்த வகையில் ஏடுகளின் பொறுப்பு அளப்பரியது. நம்நாட் டில் அக்கடமையைச் செய்யாத ஏடுகள். எனவே, அவையும் நோய்கள் என்றார் பெரியார்.
தெரிந்தெடுப்பவர்கள் முட்டாள்களாக இருந்தால் அயோக்கியர்கள்தான் ஆள்ப வர்களாக இருப்பார்கள் என்கிற சொல் லடை உண்டு - அப்படி, அயோக்கியர்கள் ஆள்வோராக வந்துவிடும் நிலை பல நாடுகளிலும் ஏற்பட்டதுண்டு. இந்தியாவும் தமிழ்நாடும் விலக்கல்ல. அத்தகைய ஆள்வோர் லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் செய்து மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கொடுமை, பத்தாண் டுகளாக. அதனைக் கண்டிக்கத் திராணி அற்ற சட்டசபை. ஒரு வகையில் ஊழ லுக்கும் கொள்ளைக்கும் துணைபோகும் சட்டசபை. எனவே, இதுவும் நோய்களில் ஒன்று என்று பெரியார் சொன்னது சரி தானே?
சிறிய பெட்டிக்கடை தொடங்குவதற்குக் கூட விதிமுறைகள் உண்டு. ஆனால், நம் நாட்டில் கட்சி தொடங்குவதற்கு எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இரவில் நினைத்துக் காலையில் தொடங்கி விடலாம். கட்சிக்கு விளம்பரம் தரும் பணி யைப் பத்திரிகைகள் தருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் என ஒன்று உள்ளது. பெயர்தான் ஆணையம். எந்த வொரு ஆணை பிறப்பிக்கவும் இயலாத ஆணை யர்கள். தம் பணிக்காலம் முழு மையும் அமைச்சர்கள் உதட்டசைவின்படி உத்தி யோகம் பார்த்த அய்.ஏ.எஸ் அலுவலர்கள் மூன்றுபேர். பழைய கால கிராமஃபோன் தகடுகளில் பொறிக்கப்பட்ட (ஹிஸ் மாஸ் டர்ஸ் வாய்ஸ்) படம் மாதிரி, எஜமானின் குரல் கேட்கும் நாய்கள் போல இருந்தவர் கள், பதிவு செய்து கொள்வார்கள். தேர்தல் சின்னம் ஒதுக்கித் தருவார்கள். அவ்வளவே. பலநாடுகளில் அரசு அனுமதி பெற்றுத்தான் கட்சி ஆரம்பிக்க முடியும். அப்படி இருந் தால் இங்கே இத்தனைக் கட்சிகள் இருக் காது. நூற்றுக்கணக்கான கட்சிகளின் வேட் பாளர்கள் போட்டியிட்டு, கேலிக் கூத்தாக் கும் நிலை. தேர்தல் முடி வில் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று நிலைத்து நிற்பவை எனும் தகுதி இரண்டு, மூன்று கட்சிகளுக்கு மட்டுமே கிட்டுகிறது. இப்பொழுதெல்லாம் ஏழு, எட்டுக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்ட கொள்கை களைப் பேசி முழக்கியவர்கள் தேர்தலுக் காக ஒன்றை இலட்சியத்துடன் கைகோத் துப் போட்டியிடுகிறார்கள். ஒற்றை இலட்சியம் என்பது பதவியைப் பிடிப்பது என்பதே. என்ன ஜனநாயகம். எல்லாம் கேலிக் கூத்துதான். அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் இரண்டே கட்சிகள். சில இடங்களில் மூன்று கட்சிகள் எனும் நிலை. ஜனநாயகம் செழிக்கும் வாய்ப்பு - மக்கள் சேவையை மய்யமாகக் கொண்ட ஆரோக்கியமான அரசியலின் அடையா ளம். அந்த நிலையை நம்நாடு பெறுவது எப்போது? ஏக்கம்தான் மிஞ்சுகிறது. எனவே நோய்களில் ஒன்றாகப் பெரியார் குறிப்பிட்டதில் குறை ஏதும் காண முடியாதே!
முத்தமிழ் என்கிறோம். இயல், இசை, கூத்து எனப் பிரிக்கிறோம். காலமூப்பின்படி மனிதக்குலம் சைகையால் பேசி, சொற்க ளில்லாத ஒலிகளை எழுப்பி, இறுதியாகச் சொல்தோன்றி எழுத்தமைத்துப் பேசியும் எழுதியும் வருகிறோம். இந்த இயல் தமிழ் முதலிலும் கூத்துத் தமிழ் மூன்றாவதாகவும் இடம்பிடித்துள்ளது. இசை நடுநாயகமாக இருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்பான சினிமான மூன்று தமிழும் கலந்தது. முதலில் பேசாமல் இருந்தது. பின்னர் பேசத் தொடங்கியது. மனத்துக்கு மகிழ்ச்சி தரும் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. ஆனால், தமிழ்நாட்டிலோ... எல்லாமே சினிமா என்றாகிவிட்டது. திராவிடர் இயக் கத்துடன் தொடர்புடைய சினிமா நடிகர் களாகச் சிலர் இருந்தனர். நடிப்பு ஒரு தொழில் என்ற தன்மையில் இருந்தனர். திராவிடர் இயக்கம் எனும் போது, 1910 இல் தொடங்கப் பெற்ற பார்ப்பனரல்லாதார் சங்கம். 1912 இல் பெயர் மாற்றம் பெற்ற திராவிடர் சங்கம் என்றாகி, அதன் நீட்சியாக நீதிக்கட்சி எனப்பட்ட தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் வெளியிட்ட திராவிடர் கொள்கை விளக்கத்துடன் தொடர்பும் சொந்தமும் கொண்டாடும் இயக்கமாகும். அத்தகைய உணர்வோடு நடிகர்கள் இருந்தனர். நடிகவேள் ராதா, கே.ஆர். இராமசாமி, டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். இராஜேந்திரன் போன்றோர் இருந்தனர். இந்தப்பட்டியயலில் இடம் பெறாத எம்.ஜி. ராமச்சந்திரன் எனும் நடிகர் கத்திச் சண் டைப் படங்களில் நடித்துப் பிரபலமானவர். தி.மு.க.வின் பொருளாளர் என்ற நிலையில் இருந்தவர். அவருக்கு ஏற்பட்ட வருமான வரிச் சிக்கலிலிருந்து தப்புவிப்பதற்காக அன்றைய இந்திய அரசு அதிகாரிகள் விதித்த நிபந்தனைப்படி, கழகத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார். அதனைக் கேள்விப்பட்ட தந்தை பெரியார் அவரிடம் பேசினார். கழகத்தில் அவர் கண்ட குறைகளைப் பற்றி பேசித் தீர்த்துக் கொள்ளலாம். கழகத்தைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் வேண்டாம் என்று கூறினார். மறுநாள் வருவதாகக் கூறிப் போனவர் தனிக்கட்சியை அறிவித்து விட்டார். சினிமாக் கவர்ச்சியின் காரணமாக அவரின் கட்சி வளர்ச்சி பெற்றது. ஆட்சி யிலும் அமர்ந்தது. பத்து ஆண்டுகள் அவர் முதலமைச்சராக இருந்தார். அவருக் குப்பின் அவரின் சகநடிகையாக இருந்த ஜெயலலிதாவும் முதலமைச்சரானார். நடி கர்களும், நடிகையும் நாடாண்ட விசித்திரம் இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் நடந்தது. (கடவுள்" வேடங் களில் நடித்துப் பிரபலமான தெலுகு நடிகர் சிறிது காலம் ஆந்திராவை ஆண்டார்). எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நேர்மை யான ஆட்சி தருவோம் எனக் கூறினர். அறிவற்ற வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், நடைமுறைச் சொல்லடை போலவே முட்டாள்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் (அயோக்கியர்களாகவே) நேர்மையான, ஊழலற்ற ஆட்சியைத் தரவேயில்லை. இதனை நடைபெற்ற வழக்குகள் எண்பிக்கின்றன. அமைச்சர்கள் ரசிகர் மன்றத் தலைவர் ஜனார்த்தனம், மருங்காபுரி பொன்னுசாமி முதலியோர் நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கப் பட்டனர். முகவையில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்தவரும் அதனாலேயே அமைச்சராக ஆக்கப்பட்ட வருமான சத்தியமூர்த்தி என்பவரும் சிறைத்தண்டனை பெற்றவர். இப்படிப்பட்ட கேவலங்கள் அரங்கேறியதற்கு சினிமா காரணி. அதே போலவே ஜெயலலிதாவின் ஊழல்களும், குற்றங்களும் பெற்ற தண் டனைகளும் அனேகம். அத்தனைக்கும் காரணம் மக்களின் அறியாமை. அதற்குக் காரணம் சினிமா மாயை நோய் என்றது ஞாயம்தானே!
இப்போதுகூட ஓய்வு பெற்ற ஒரு பார்ப்பன நடிகரும், அரசியல் கோதாவில் குதித்துள்ளார். மற்றொரு மராட்டி நடிகர் தமிழ்ச் சினிமாவில் நடித்துப் பிரபலமாகிப் பார்ப்பனப் பெண்ணை மணந்தவர். அவ ரும் இதோ, அதோ என்று பல ஆண்டு களாகப் உதார்விட்டவர், கோதா வில் இறங்கும் பணிகளில் ஈடுபட்டு விட்டார்... இவர்கள் தப்பித் தவறித் தேர்வு செய்யப் பட்டு விட்டால்...
விடைகாண முடியாத,மீண்டு வர முடியாத நிலைதான். பெரியார் எப்பேர்ப் பட்ட தொலைநோக்காளர்! மக்களின் இதயத்துடிப்பு அறிந்தவர். மக்களின் நாடி பார்த்துச் சொன்ன நோய்கள் அய்ந்தும், பேய்கள் மூன்றும் நிஜமாகி விட்டனவே...
வியக்காமல் இருக்க முடியவில்லை...
அவர் வழி நடப்போம்.
அவர் கனவை நிறைவேற்றுவோம். அவரது நினைவு நாளில் சூள் உரைப்போம். திராவிடம் வெல்லும்!
"தோழர்" என்ற சொல் அறிமுகம்
மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய தந்தை பெரியார் அவர்கள் 13.11.1932 “குடிஅரசு” இதழில் ‘ஈ.வெ.ரா. குறிப்பு’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறி விப்பை வெளியிட்டார்கள்.
இயக்கத் தோழர்களும் இயக்க அபி மானத் தோழர்களும் இனி ஒருவருக் கொருவர் அழைத்துக் கொள்வதிலும் பெயருக்கு முன்னால், பின்னால் மரி யாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கிற பதத் தையே உபயோகிக்க வேண்டும் என் றும், மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலை வர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகளைச் சேர்த்துப் பேசவோ எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். குடிஅரசிலும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
- ஈ.வெ.ரா.

No comments:
Post a Comment