மோடியின் ஆட்சியில் சீர்திருத்தங்கள் திருட்டுக்கு இணையாக உள்ளன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

மோடியின் ஆட்சியில் சீர்திருத்தங்கள் திருட்டுக்கு இணையாக உள்ளன

  ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.11, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு காணொலி நிகழ்வில் பேசும் போது, ‘இந்தியச் சூழலில், கடு மையான சீர்திருத்த நடவ டிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினம். நாம் அதீத ஜன நாயகத்தைப் பெற்றுள்ளோம். இந்நிலையில், சுரங்கம், நிலக்கரி, தொழி லாளர், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத் தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் ரீதியான துணிவு தேவைப் படுகிறதுஎன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘அதீதஜனநாயகம்என்ற ஹேஷ்டாக்கில் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், ‘மோடியின் ஆட்சியில் சீர்த்திருத்தங்கள் என்பவை திருட்டுக்கு இணையாக உள்ளன. அதனால்தான் இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை துறக்க விரும்புகிறதுஎன்று குற்றம்சாட்டியுள்ளார்.

நீராதாரங்களை மாசுபடுத்துவோர்மீது

குண்டர் சட்ட நடவடிக்கை : உயர்நீதிமன்றம் பரிந்துரை

மதுரை,டிச.11,  கரூர் மாவட்டத்திலுள்ள சாயப்பட்டறை களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதால் அமராவதி ஆறு மாசடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுநீரும் இந்த ஆற்றில்தான் சேர்கிறது. இதை தடுத்து நிறுத்தி பாதுகாக்க எந்த நடவடிக்  கையும் இல்லை. ஆறு மாசடைவதால் விவசாயம் பாதித்து, விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அமராவதி ஆற்றில் சாயக் கழிவுநீர் கலப்பதை தடுத்து,  பாது காக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ் வாறு உயர்நீதிமன்ற பதிவாளர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கரூரில் 435 சாயப் பட்டறைகள் இருந்தன. நீதிமன்ற உத்தரவால் பல சாயப் பட்டறைகள் மூடப்பட்டன. தற்போது 68 ஆலைகள் மட்டுமே உள்ளன. இதில் அமராவதி ஆற்றிலிருந்து 100 மீட்டருக்குள் 3 ஆலைகள் மட்டுமே உள்ளன. பெரும்பாலான ஆலைகளில் சுத்தி கரிப்பு மய்யங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘இந்த 68 ஆலைகளில் கடந்த 5 ஆண்டு களில் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லையா? கோதாவரியில் கழிவுநீர் கலந்து நிக்கல் மற்றும் தாமிரத்தின் அளவு அதிகமாகி மாசடைந்ததால் சுமார் 500 பேர் வரை பாதித்தனர். அதுபோன்ற நிலை அமராவதி ஆற்றுக்கு ஏற்பட வேண்டுமா? ஏற்கெனவே நொய்யல் ஆறு இறந்துவிட்டது. இருக்கும் நீர் நிலைகளையாவது பாதுகாக்க வேண்டாமா? நீராதாரங்களை மாசுபடுத்துவோரை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏதுவாக தேவையான சட்டத்திருத்தம் செய்ய வேண்டுமென அரசுக்கு பரிந்துரைக் கிறோம்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் மாசு ஏற்படுத்தும் வாரியத்தை போல உள்ளது. லஞ்சம் மற்றும் ஊழலால் அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர். இயற்கை வளங்களை மாசுபடுத்தி, நோய்கள் உருவாக நாமே காரணமாக இருக்கிறோம். இதனால், மருத்துவக்கல்லூரிகளை அதிகரித்தும் என்ன பயன் ஏற்படப் போகிறது’’ என்றனர். 

பின்னர் நீதிபதிகள், அமராவதி ஆற்றில் இரட்டை வாய்க்கால் பகுதியில் 5 இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நீர் மாதிரி சேகரித்து சென்னை கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்து அறிக்கை தாக்கல் வேண்டும். தமிழக அரசு தரப்பில் விரைவில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட வேண்டிவரும் என உத்தரவிட்டு விசாரணையை டிச. 17க்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment