ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     மோடி அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் தான், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என விவசாய அமைப்புகள் திட்டவட்டமாக கூறியுள்ளன.

·     போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 11 பேர் இறந்துள்ள னர். இன்னமும் எத்தனை விவசாயிகளை பலி கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

·     அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர அரசு மருத்துவ கல்லூரிகளில் மேலும் சில இடங்களை ஒதுக்கிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

·     கீழ் நிலைப் பதவிகளுக்கான கல்வித்தகுதியை தகுதிக்கு மேல் நிர்ணயிப்பது, தகுதி நீக்கத்துக்குரிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     விவசாயிகளைக் கொள்ளையடிக்க புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன, அவற்றைத் திரும்பப் பெறுங்கள் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     .பி.யில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தாக்குதல் இவை அனைத்தும் யதார்த்தமானது என மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவகையிலும், ஆண் - பெண் இருவர் மனமொத்து திருமணம் செய்து கொள்வது யோகி அரசுக்கு மிகப்பெரிய குற்றமாக இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

·     இந்தியாவில் யதார்த்தம் சில சமயங்களில் யதார்த்த மற்றதாகத் தெரிகிறது. இது கடந்த வாரம் இது நடந்ததைக் கண்டோம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்ப தற்காகதெய்வங்களின்' ஆசீர்வாதங்களைக் கோருவதற்காக ஒரு மத விழாவை பிரதமர் நிகழ்த்தினார். நாம் தொற்றுநோயைத் தோற்கடித்தது போலவும், பொருளாதாரம் மிகச் சிறப்பாகச் செயல்படுவது போலவும், அதன் காரணமாக, முன்னுரிமை இல்லாத ஒன்றைச் செய்வதற்கு நம்மிடம் பணம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசு. உண்மை என்னவென்றால், தொற்றுநோய் இன்னும் நாடு முழுவதும் பரவி வருகிறது, நமது மோசமான சுகாதார சேவைகளை மூழ்கடித்து, லட்சக்கணக்கான இளம் இந்தியர்கள் தங்களுக்குத் தேவையான வேலைகளை இழக்கச் செய்கிறது. நவம்பர் மாதத்தில் 3.5 மில்லியன் இந்தியர்கள் வேலை இழந்த தாக எகனாமிக் டைம்ஸ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது என எழுத்தாளர் தவ்லீன் சிங் தனது கட்டுரையில் அரசை சாடியுள்ளார்.

பிபிசி நியூஸ் தமிழ்:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக போராட்டக்குழுவினர் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தலை வர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், ராஜஸ்தானில் இருந்து டெல்லி வரும் ஜெய்பூர் - டெல்லி நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும், ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு விவசாயிகள் ஷஹஜன்பூரில் இருந்து பயணத்தைத் தொடங்குவார்கள் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், எழுத்தர் பணிக்கான தொடக்க நிலைத் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து முழு ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அமைச்சர், அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஆகியோருக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் "இது தொடர்பாக எஸ்பிஅய் அளித்திருக்கிற பதில் திருப்திகரமாக இல்லை. இது குறித்து முழு ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை பணி நியமனத் தேர்வுகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக் கூடாது" என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

·     மத்திய அரசின் கொள்கை தெளிவாக உள்ளது. கார்ப்ப ரேட் நிறுவனங்கள் விவசாயத் துறைக்குள் நுழைய வழி வகுக்க விரும்புகிறது என்று உழவர் தலைவர் கமல் ப்ரீத் சிங் பன்னு குற்றம் சாட்டியுள்ளார்.

·     இந்து பெண்களை மணந்த முஸ்லீம் ஆண்கள் மீது காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மற்றும் பல நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ‘லவ் ஜிஹாத்சட்டத்திற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

·     மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனத்தின் மீது கல்லெறிந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பில் பணிபுரிந்த மூன்று அய்.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத் தரவு பிறப்பித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்காள அதிகாரிகளை மத்திய அரசு  'அச்சுறுத்துகிறது' என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

குடந்தை கருணா

13.12.2020

No comments:

Post a Comment