தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய, ”பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்” எனும் நூல், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் நேற்று (18.12.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன்வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழையும், ரூபாய் 10 ஆயிரம் காசோலையையும் வழங்க, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். மேலும் நூலை பதிப்பித்த திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகத்திற்கு பாராட்டுச் சான்றும்,
ரூ.3333-க்கான காசோலையும் வழங்கப்பட்டது. உடன்: மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நா. பாலகங்கா, எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.

No comments:
Post a Comment