சீரிய பொதுத் தொண்டர் மானமிகு சக்திதாசன் மறைவிற்கு வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

சீரிய பொதுத் தொண்டர் மானமிகு சக்திதாசன் மறைவிற்கு வீரவணக்கம்!

தமிழகக் குடியரசு கட்சியின் சீரிய தலைவரும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கை களிடத்தில் அழுத்தமான பற்று கொண்டவரும், புத்த மார்க்கத்தை வாழ்வியலாகக் கொண்டவரும்சொல்லின் செல்வர்' என்ற அடைமொழிக்குச் சொந்தக் காரரும், மக்கள் பிரச்சினையில் முன்னின்று போராடக் கூடியவருமான மானமிகு சக்திதாசன் (வயது 92) மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அவரின் அளப்பரும் பொதுத் தொண்டுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆறு தலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.12.2020

No comments:

Post a Comment