இதய இரத்தக் குழாய் குறித்த பன்னாட்டு மருத்துவ மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

இதய இரத்தக் குழாய் குறித்த பன்னாட்டு மருத்துவ மாநாடு

சென்னை, டிச. 13- சென்னை, சிம்ஸ் மருத்துவமனையின் (SIMS Hospital) ஒரு பிரிவாக செயல்படும் இதய நோய் மற்றும் இரத்தக் குழாய் கோளாறுகளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யும் - இதயப் பகுதி அறுவை சிகிச்சை மய்யம் டிசம்பர் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில், இத்துறைக்கான பன்னாட்டு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதய நோய் அறுவை சிகிச்சைக்கான அமெரிக்க சங்கம், இதய நோய் மற்றும் இதயப் பகுதி அறுவை சிகிச்சைக்கான ஆசிய சங்கம் மற்றும் இத்துறைக்கான இந்திய சங்கத்தின் ஒத்துழைப்போடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இத்துறைக்கான 9ஆவது பன்னாட்டு மாநாடான இது, முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பன்னாட்டு மாநாடு குறித்து எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து பேசுகையில், “இதய மருத்துவம் மற்றும் இரத்த நாளக் கோளாறுகள் சிகிச்சை தொடர்பான இந்த பன்னாட்டு மாநாட்டை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே நடத்தி வருகிறோம். அதற்கு மிக முக்கிய காரணியாக இருந்து, மாநாட்டுக்கு பொறுப்பேற்று, தொடர்ந்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் மருத்துவர் வி.வி. பாஷி அவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். இந்த ஆண்டு மாநாட்டை தற்போதைய சூழலுக்கு ஏற்ப இணைய வழி மாநாடாக நடத்துவது சிறப்பு. இதனால், இத்துறையில் பணியாற்றி வரும், உலகின் பல முனைகளில் உள்ள நிபுணர்கள் தங்களது கருத்து, அனுபவம், ஆய்வுகளை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்வதும், அதன்மூலம் இந்த சிகிச்சை முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதும் சாத்தியமாகிறதுஎன்றார்.

மகளிர் பாதுகாப்பிற்காக வாகனங்களில் கண்காணிப்பு கருவி பொருத்தி அமல்படுத்துக!

சென்னை, டிச. 13- பொதுசேவை மற்றும் சரக்கு வாகனங்களில் வாகன கண்காணிப்பு கருவிகளை பொருத்தும் சி.எம்.வி விதி 125 எச் அமல்படுத்தப்படவேண்டும் என்று பன்னாட்டு சாலை பாதுகாப்பு நிபுணர் டாக்டர் கமல் சோய் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

2012 ஆம் ஆண்டில் டில்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத் திற்கு பிறகு, இந்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உயர் விகிதங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண குற்றவியல் சட்டங்களின் திருத்தங்களை பரிந்துரைக்க நீதிபதி (ஓய்வு) ஜே.எஸ்.வர்மா அவர்களின் தலைமையில் ஒரு ஆலோசனை குழுவை அமைத்தது.

பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து இந்த குழு ஆய்வு செய்தது. இதன் தொடர்பாக, குழு பல பரிந்துரைகளை வழங்கியிருந்தது அவற்றில் ஒன்று "அனைத்து பேருந்துகளிலும் சேதப்படுத்த முடியாத ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு ஏஅய்எஸ் 140 இணக்கமான விஎல்டி சாதனங்களை பொருத்துவது தொடர்பாக விதி 125 எச்அய் நடைமுறைப்படுத்துவதற்கான ஆதார பொறிமுறையை பின்பற்ற வேண்டும்.

வாகன உற்பத்தியாளர் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களால் மாநிலத்தில் புதிய வாகனங்களில் வி.எல்.டி சாதனங்கள் பொருத்தப்பட்ட பிறகே செயல்படுவதற்கு அனுமதிக் கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆர்.டி. அலுவலகங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என டாக்டர் கமல்சோய் தமிழக அரசுக்கு அறி வுறுத்தி யுள்ளார்.

No comments:

Post a Comment