விருத்தாசலம்
மாவட்ட இளைஞரணி சார்பில், தேசியம்
காக்க தமிழினம் காக்க' புறப்படுவோரே பதில் கூறுங்கள் "மயக்க பிஸ்கட்டு"கள் ஓர் எச்சரிக்கை எனும் நூல், விருத்தாசலத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமை
வகித்தார். மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விருத்தாசலம் நகர
தலைவர் நா.சுப்ரமணியன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்
நிகழ்வை தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், மாவட்ட
இளைஞரணி செயலாளர் சே.பெரியார்மணி, விருத்தாசலம்
ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன், பெண்ணாடம்
நகர செயலாளர் செ.க.இராஜேந்திரன்,
விருத்தாலம் நகர செயலாளர் த.சேகர், மாவட்ட
மாணவர் கழகத் தலைவர் செ.இராம ராஜ்,
விருத்தாசலம் நகர இளைஞரணித் தலைவர் கு.பிரவீன்குமார் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment