தஞ்சையில் கழக இளைஞரணி சார்பில் "மயக்க பிஸ்கட்டுகள் - ஓர் எச்சரிக்கை" புத்தகம் விநியோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

தஞ்சையில் கழக இளைஞரணி சார்பில் "மயக்க பிஸ்கட்டுகள் - ஓர் எச்சரிக்கை" புத்தகம் விநியோகம்

 

தஞ்சை, டிச. 13- தஞ்சை மாவட்ட இளைஞரணி சார் பில் "தேசியம்காக்க-தமிழினம் காக்க" புறப்படுவோரே, பதில் கூறுங்கள்மயக்கபிஸ்கெட்டு கள் - ஓர் எச்சரிக்கை' எனும் தலைப்பில் திராவிடர்கழகத் தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள புத்தகம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் 8.12.2020 அன்று மாலை 6.30 மணியளவில், திராவிடர் கழக மாநில இளை ஞரணி துணை செயலாளர் தஞ்சை இரா.வெற்றிக்குமார் தலைமையில் பொதுமக்களி டம் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத் தலை வர் சி.அமர்சிங் பொதுமக் களிடம்  புத்தகத்தை வழங்கி பரப்புரை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், தஞ்சை மாவட்ட இளைஞ ரணி செயலாளர் நா.வெங்க டேசன், தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .விஜயக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வீதிகளில் வணிக பெருமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள், பொது மக்களிடம் Ôமயக்கபிஸ்கெட் டுகள்-ஓர் எச்சரிக்கைÕ புத்தகம் வழங்கப்பட்டது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாந கர செயலாளர் சு.முருகேசன், தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, மாநகர இளைஞரணி துணை தலைவர் .பெரியார்செல் வம், இளைஞரணி தோழர்கள் ஜான் பிரிட்டோ, ரோகித், மாணவர் கழகம் மானவீரன், .விடுதலையரசி, பொ.பகுத்தறிவு, கபிலன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment