"மயக்க பிஸ்கட்டு"கள்-ஓர் எச்சரிக்கை என்னும் புத்தகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

"மயக்க பிஸ்கட்டு"கள்-ஓர் எச்சரிக்கை என்னும் புத்தகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

 

வடலூரில் கழக சார்பில் "மயக்க பிஸ்கட்டு"கள்-ஓர் எச்சரிக்கை என்னும் புத்தகங்கள் 11.12.2020 அன்று வடலூர் குறுக்கு சாலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், நகர தலைவர் புலவர் ராவணன், நகர செயலாளர் குணசேகரன், கோ. இந்திரஜித், ஒன்றிய அமைப்பாளர் சேகர் ஆகியோர் வழங்கினர்.

தி.மு.. துணைப் பொதுச்செயலாளர் முனைவர் .பொன்முடி விடியலை நோக்கி என்கின்ற பிரச்சாரப் பயணத்தை முன்னிட்டு செய்யாறுக்கு வருகை தந்தபோது மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஒப்பற்ற தலைமை புத்தகத்தை வழங்கி கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் .அன்பழகன், மாவட்ட தலைவர் .இளங்கோவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் காமராசன், தங்கம், பெருமாள், சீனிவாசன், என்.கஜபதி மற்றும் பெரியார் பிஞ்சுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment