டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் போராடும் விவசாயிகள், மத்திய அரசின் திருத்த யோசனைகளை நிராகரித்து, அடுத்து ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
· உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்குப் பிறகும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாமரை உள்ளிட்ட தேசிய சின்னங்கள் இடம் பெறுமாம்.
· மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து இன்று டிசம்பர் 11ஆம் தேதியை கருப்புத் தினமாக கடைப்பிடிக்க வட கிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· தமிழ் நாட்டில் ஆன்மீக அரசியல் புதிதல்ல. ஏற்கனவே அதிமுக அதைத்தான் செய்கிறது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
· மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஒரே மாணவர்க்கு எப்படி இரண்டு விடைத்தாள் இருக்க முடியும் என்பது குறித்து விரிவான அறிக்கை தரும்படி, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியில் பெண்களுக்கு 80 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், இடைக்கால தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது மிக தாமதமாகி விட்டது என்றும் கருத்து தெரிவித்து உள்ளது.
· தற்போது விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், நாட் டில் ஜன நாயகம் தழைத்திட உதவிடும் என பத்திரிக்கையாளர் சுகாஸ் பல்சிகார் தெரிவித்துள்ளார்.
· வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் உட்படுத்தாமல் அரசு நிறைவேற்றிய நிலையில், விவசாயிகளின் கோரிக்கையான சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அரசுக்கு ஒரு பாடமாகும் என தலையங் கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மத்தியில் ஆளும் பாஜக, தனக்கு எதிரான அமைப்புகளை பிளவு படுத்த திட்டம் தீட்டியுள்ளது. அதன் தலைமை ஹிட்லர், முசோலினிக்கு ஒப்பானது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
தி ஹிந்து:
· புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ஜனநாயகப் பண்புகளை அழித்துவிட்டு, மறு புறம் ஜனநாயக மாண்பைப் பற்றி பேசுவது அவரின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துகிறது என சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
· கர்நாடகாவில் பசுவதைத் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற நடவடிக்கைகளைப் புறக் கணித்தது.
பிபிசி நியூஸ் தமிழ்:
டில்லியிலும் பிற மாநிலங்களிலும் நடந்து வரும் விவசாயிகளின் போராட்ட பின்னணியில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுவதாக இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே வெளியிட்ட சர்ச்சை கருத்தால் அவர் கடுமையாக நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
தி டெலிகிராப்:
· வேளாண் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், உணவு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக மசோ தாக்கள் இயற்றப்பட்டதாக உணவு அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிக்கு சார்பானவை அல்ல என்று தங்கள் நிலைப்பாட்டை அரசு நிரூபிப்பதாகக் கூறினர்.
· “அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் இப்போது திறந்த நிலையில் உள்ளது. இந்த சட்டங்கள் வர்த்தகம் மற்றும் வர்த்தகத் திற்கானவை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை ”என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
· கொல்கத்தாவில் பாஜக தலைவர் சென்ற கார் மீது கல் வீசும் சம்பவம் காவி முகாமால் "அரங்கேற்றப்பட்ட நாடகம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
· நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதர வாக கல்கத்தாவில் உள்ள காந்தி சிலைக்கு அருகே திரிணாமுல் காங்கிரஸின் மூன்று நாள் உள்ளிருப்பு போராட்டத்தின் உச்சக் கட்ட நிகழ்வில் உரையாற்றிய மம்தா கூறினார்: “பாஜகவினர் மெகா பொய்யர்கள், நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். பாஜகவினர் நடத்திய கூட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதியில் பிறந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், தாகூர் பிறந்தது ஜோரசங்கோ தாகூர் பாரி. என்ன ஒரு பெரிய பொய், வரலாற்றை மாற்றுவதற்கான பெரிய முயற்சி? என சாடினார்.
லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக வீதிகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, மத்திய விஸ்டா திட்டத்தின் பேரில் நீங்களே ஒரு அரண்மனையை கட்டிக்கொண்டிருந்தீர்கள் என்று வரலாறு பதிவு செய்யும். ஒரு ஜனநாயகத்தில், அதிகாரம் என்பது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அல்ல, மாறாக பொது சேவை மற்றும் நலன் சார்ந்ததாகும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர் பாளர் சுர்ஜேவாலா பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்
குடந்தை கருணா
11.12.2020
No comments:
Post a Comment