எல்லோருக்கும் சமூக நீதி கிட்டவேண்டும் என்று பாடுபட்டு வருபவர் தொல்.திருமாவளவன்: டாக்டர் இலக்குவன் தமிழ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 25, 2020

எல்லோருக்கும் சமூக நீதி கிட்டவேண்டும் என்று பாடுபட்டு வருபவர் தொல்.திருமாவளவன்: டாக்டர் இலக்குவன் தமிழ்

சமூகநீதி மனிதப் பண்பின் ஓர் இலக்கணம். சமூக நீதி என்பது மனிதப் பண்பின் உச்சநிலை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திராவிடத் தத்துவத்தின் அடி நாதம் சமூகநீதி. அந்த சமூகநீதியை பாராட்டு முகமாக இன்று நடக்கவிருக்கின்ற வீரமணி சமூகநீதி விருது வழங் கும் விழாவிற்கு தலைமையேற்று இருக்கும் அமெரிக்க பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே!

சமூக நீதிக்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடி வருகின்ற, சமூகநீதியின் குரல்வளை நெரிக்கப்படுகின்ற பொழுதெல்லாம் ஓங்கி குரல் கொடுத்து வருகின்ற, இந் தியாவில் சமூகநீதி இதுகாணும் ஓரளவுக்கு நிலைத்திருக்க காரணமாக இருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் வீரமணி அவர்களே!

இன்றைய விழாவின் நாயகன், டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களது கொள்கைகள் மீது மிக்க பற்றும் நம்பிக்கையும் கொண்டவரும், ஜாதி மதங்களைக் கடந்து அனைவருக்கும் சமூகநீதி வேண்டும் என்று தமிழக வீதி முதல் இந்திய நாடாளுமன்றம் வரை ஓங்கி குரல் கொடுக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களே,

பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் விருதினை வழங்க இருக்கின்ற டாக்டர் மீனாம்பாள் அவர்களே, நன்றி உரை கூற இருக்கின்ற பல மொழிகளில் புலமைபெற்ற பேராசிரியர் டாக்டர் இரவிசங்கர் கண்ணபிரான் அவர் களே! மற்றும் இவ்விழாவினை கண்டுகளிக்க வந்திருக் கின்ற தோழர்களே, தோழியர்களே வணக்கம்!

இந்திய மண்ணிற்கென்றொரு சொந்தமான மனித நேயக் கொள்கை, தத்துவம், சித்தாந்தம், இருக்குமென்றால் அதுதிராவிடச் சிந்தனை' மட்டுமே.

புத்தரின் தம்மம் திராவிட சிந்தனை, வள்ளுவரின்அறம்' திராவிட சிந்தனை, வாடிய பயிரைக் கண்டபோதெல் லாம் வாடிய வள்ளலாரின் ஆறாம் திருமுறை திராவிட சிந்தனை. ஒரு பைசா தமிழன் இதழில் அயோத்திதாச பண்டிதர் எழுதியது திராவிட சிந்தனை. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு சொல்லிச் சென்றதும் திராவிட சிந்தனைகளே வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் திராவிட சிந்தனைக்கு இன்று உயிர் ஊட்டம் தருப வர் ஆசிரியர் வீரமணி.

திராவிடக் கொள்கையின் மிக முக்கிய கோட்பாடுகள் அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமான வர்களே என்பதும் எல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலையை உருவாக்குதலும், ஆக இக்கோட்பாடுகளின் அடிநாதம் சமூகநீதியே!

Dravidam is the philosophy that stands in opposition to, stands in contrast to all other Indian philosophies and traditions that have institutionalized discrimination, and fostered inequity. It is unfortunate that in India today, some have the privilege in the name of tradition to dehumanize others. It is high time the youngsters of India defy the traditions that makes you and others inhuman. Remember that both the oppressor and the oppressed are equally dehumanized. For India to shine in the world arena, you have to build a society where equality and equity are guaranteed for every men and women of India. Without equality and equity among the various sections of the society, the modern India, the shining India will be a mere pipe dream, mere a mirage.

Periyar and Dr. Ambedkar are the true visionaries and they have laid out the right architecture for building a modern India. Their clarion call for equality and equity should continue to echo all over India until the time we achieve equality and equity for all Indians.

தன் வாழ் முழுவதும் சமூகநீதிக்காக போராடுவதையே கொள்கையாக கொண்ட ஒரு தலைவர் இந்தியாவில் இன்று இருக்கிறார் என்றால் அது ஆசிரியர் டாக்டர்

கி.வீரமணியாகத்தான் இருக்க முடியும். அதனால் தான் அவரை போற்றும் முகமாக அமெரிக்க பெரியார் பன்னாட்டமைப்பு அவரின் பெயரில் இந்த கி.வீரமணி சமூகநீதி விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இதுகாறும் 20க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப் பட்டிருக்கிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நிறம் என்ற எதையும் பொருட்படுத்தாது சமூகநீதி என்ற நிலைப் பாட்டை மட்டுமே வைத்து வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் டாக்டர் திருமாவளவன் அவர்கள் சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். எல்லா ஜாதியினருக்கும், எல்லா மதத்தினருக்கும் சமூகநீதி கிட்டவேண்டும் என்று பாடுபட்டு வருகிறவர். இந்த உயரிய சிந்தனையை பாராட்டி, தமிழக வீதியிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து இவரது சமூக நீதிக் குரல் ஒலிக்க வேண்டு மென்று வாழ்த்தி, பாராட்டி இந்த 2020 ஆண்டிற்கான (இரண்டாயிரத்து இருபத்திற்கான) கி.வீரமணி சமூகநீதி விருதினை அளிப்பதில் அமெரிக்க பெரியார் பன்னாட்ட மைப்பு மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.

டாக்டர் திருமாவளவனுக்கு எங்களது வாழ்த்துகள்!

After Periyar, Dr. Veeramani has been doing an extraordinary job in the championing the message of Dravidam as espoused by Periyar and Dr. Ambedkar all over the world. He has been a source of inspiration for many leaders of India including Dr. Thirumavalavan. This deserves show of our gratitude and so this social justice award is hamed after Dr. K. Veeramani.

Dr. Thirumavalavan has been echoing the calls of social justice as espoused by Dr. Ambedkar and Periyar from the streets of Tamilnadu to the Parliament of India. His call for social justice for all Indians, cutting across all caste and religious boundaries deserves appreciation, deserves honoring and so, today the K. Veeramani Social justice award for the year 2020 is presented to Dr.Thirumavalavan. Congratulations Dr. Thirumavalavan.

No comments:

Post a Comment