‘‘ஊசி மிளகாய்'' - காவி அண்ணாமலையாரின் ஆரோகணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 27, 2020

‘‘ஊசி மிளகாய்'' - காவி அண்ணாமலையாரின் ஆரோகணம்!

தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் பா... எப்படியும் காலூன்றி விடக் கூடாது என்ற உள்ளார்ந்த உறுதியோடு செயல்படும் பொறுப்பை மற்ற எதிர்க்கட்சிகளும், அதன் தலைவர்களும் ஏற்றிருப்பதைவிட பன்மடங்கு கூடுதலான வேகத்தோடு எடுத்து செயல்படுத்தும் மகத்தான ‘‘தேசப் பணியை'' - திடீர் தேச பக்தி திலகங்களான இரண்டு முக்கிய ‘‘பெரிய அரிய '' தலைவர்கள் பா...விலிருந்து கொண்டே நாளும் தங்கள் ‘‘அறிவார்ந்த(?)'' பேச்சுகளாலும், பேட்டிகளாலும் நாள் தவறாமல் செய்து வருகிறார்கள்!

ஒருவர், அதன் புதிய தலைவராக தமிழ்நாட்டு பா...வில்     ‘‘நடப்பட்டுள்ளவர்'' ஸ்ரீமான் முருகன்ஜி.

அவர் .தி.மு.. - பா... கூட்டணி உறவை நாளும்பலப்படுத்தும்' வகையில் பேசி, மேலும் மேலும் சிக்கலில் சிக்கியவராகவே .தி.மு.கவினால் விமர்சிக்கப்படுகிறார்!

இந்தத் தீ ஒருபுறம் கொழுந்துவிட்டு எரிகிறது; கூட்டணி பா... தலைமை யார் முதல்வர் என்பதை பா... - தேசிய  ஜனநாயகக் கூட்டணி (என்.டி..) தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறி, எடப்பாடி பழனிசாமி அணிக்குபுரோக்கோலாக்ஸ்' கொடுக்கிறார்.

மற்றொரு பனிப் போர் அணித் தலைவர் .பி.எஸ். அணி  படா குஷியில் உள்ளது!

சரணம், சரணம் பா... சரணம்' என்று மோடி, அமித்ஷாமீது பக்திப் பரவசம் கொண்டுமெய்' மறந்து கொண்டுள்ளது .பி.எஸ். அணி!

புதிதாக தமிழ்நாட்டு பா...வில் ‘‘நடப்பட்ட'' மற்றொருவர் மாஜி போலீஸ் அதிகாரி!

நாட்டு சேவைக்காகவே' பதவி விலகி - காவி வண்ணத்தை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு ‘‘கழகங்களே இல்லாத'' தமிழ்நாட்டை உருவாக்கிட டில்லி  பகவானின் திருத்தூதராக வந்துள்ளவர்!

.தி.மு..விடம் ஒரு முக்கிய கேள்வி கேட்கிறார்; மக்களுக்கும் - வாக்காளர்களுக்கும் பிரமாதமான ‘‘மலைப்பிரசேங்கம்'' செய்யக் கிளம்பிவிட்டார்!

‘‘ஒவ்வொரு ரேசன் கார்டு அட்டைதாரருக்கும் 2500 ரூபாய் பொங்கல்பரிசு தரும் .தி.மு.. அரசின் பணம் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான்; அதனைத்தான் இப்போது விநியோகிக்கிறார்கள். இதற்காக இப்போது ஏமாந்தால், தமிழ்நாட்டு மக்கள் மற்றொரு 5 ஆண்டுகளுக்கும் டயரைக் கும்பிடுவோராக (முன்பு பா... அன்புமணி டயர் நக்கிகள் என்று .தி.மு.. அமைச்சர்களுக்குப் புதுப்பட்டம் தந்ததை புதுப்பிப்பதுபோல் சொன்னார்) தானே இருக்கவேண்டும்?'' என்று .தி.மு.. அரசின் சாதனைக்கு ‘‘நற்சான்று''? வழங்கியுள்ளார்!

இதுபற்றி .தி.மு.. அமைச்சர் திண்டிவனம் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘2500 ரூபாய் கொடுத்த தமிழக அரசு பணம் கொள்ளையடித்தது என்றால், 6000 ரூபாய்  மத்திய பா... அரசு கொடுத்த பணம் எங்கிருந்து வந்த பணம் - அதுவும் இந்த ரகம்தானா?'' என்றார். சொல்லாமல் சொல்லி தாக்குதல் தொடுத்துள்ளார்.

மத்திய பா... மாநில .தி.மு.. ஆகிய இரண்டு ஆட்சிகளும் எப்படிப்பட்ட ‘‘நல்லாட்சிகள்''என்பது இந்த  இரு தரப்பினரின் ஆலாபனம்! ஆரோகணம்போல் தொடரட்டும்!

இவர்களது  வாக்குமூலங்களான பதில்களே போதுமானது தி.மு.. கூட்டணி கட்சி பிரச்சாரம் - மக்கள் மன்றத்திற்கு இந்த இரு முகமூடியினரை அடையாளம் காட்டி எச்சரிப்பதற்கு!

அதுமட்டுமா?

அண்ணாமலையார் பா...விற்கு எவ்வளவு பெரிய பிரச்சாரத் தொண்டு செய்கிறார் தெரியுமா?

காரைக்குடியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், பா... அரசியல் தேர்தல் வாக்குறுதியை தமிழக வாக்காளர்களுக்கு அளித்து அசத்திவிட்டார்! மன்னிப்பு மன்னரான எச்.இராஜா என்ற பூணூல் திருமேனியை - அமைச்சராக்கி அழகு பார்ப்பது பா...வின் தீர்க்கமான முடிவாம்.

பலே பலே, ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம் காட்டும் ஸ்ரீமத் ஆஞ்சிநேயரே! உங்கள் இந்த ஒரு அருள்வாக்கை  - பிரச்சாரம் செய்யும் எல்லா ஊர்களிலும் சொல்லத் தவறாதீர்கள். திரும்பத் திரும்ப அழுத்தமாக்குங்கள்!

ஏன் அமைச்சர் பதவி? முதலமைச்சராகவே கூட அமர வைப்போம் என்று கூரைமீது ஏறிக் கூவுங்கள், எச்.இராஜாவை!

வாக்குகள் பல லட்சக்கணக்கில் பா...வின் தாமரை மீது மளமளவென வந்துவிழும்!

அது மட்டுமா?

விவசாய சட்டங்களில் ஒரு துளிகூட மாற்றம் வராது' என்றும்சூப்பர் பிரதமராக, சூப்பர் மத்திய விவசாய அமைச்சர் மாதிரி'  அருணாசலம் ஆலாபனம் செய்துள்ளார்.

மாஜி அய்.பி.எஸ். அண்ணாமலையாரே, இதையும் இப்படியே எல்லா விடங்களிலும் பேசுங்கள், பேசுங்கள்! அரோகரா, அரோகரா!

தமிழ்நாட்டில், தாமரை பரந்து விரிந்து மலரந்தே விடும் - நோட்டாவை மிஞ்சும்!!

பலே! பலே! நல்லது - ராஜாவை மிஞ்சும் நல்ல ராஜவிசுவாசிகள்!

No comments:

Post a Comment