சென்னை,
டிச. 27- தந்தைபெரியார் நினைவு நாளன்று 24.12.2020 அன்று காலை முதலே சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், அமைதி ஊர்வலத்தில் பங்கேற்புக்காக கருப்பு மெழுகுவத்திகளாம் கருஞ்சட்டைப்பட்டாளம் திரளத் தொடங்கியது. திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
தலைமையில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டபோது உணர்ச்சிப்பெருக்குடன் Ôபெரியார் வாழ்கÕ முழக்கங்கள் வானதிர முழங்கப் பட்டன.
கரோனா
பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகளுடன் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் கழகப்பொறுப்பாளர்கள், மகளிர், மாணவர், இளைஞர்கள் தந்தைபெரியார் படத்தை ஏந்தியபடி அமைதி ஊர்வலத்த¤ல் பங் கேற்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை, பெரியார்
ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை
வழியே சென்று பெரியார் திடலை அடைந்தது அமைதி ஊர்வலம். அன்னை மணியம்மையார் முழு உருவச்சிலைக்கு மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் திடலில் பெரியார் 21 அடி
உயர முழு உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பெரியார் நினைவி டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் மலர்வளையம் வைக்கப்பட்டு, சூளுரை ஏற்றனர் கழகப் பொறுப் பாளர்கள். திமுக, மதிமுக,
விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு கட்சிகளின்,
அமைப்புகளின் சார்பில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் அணிஅணியாக திரண்ட வண்ணம் இருந்தனர். காலைமுதலே பெரியார் திடல் பெரும் பரபரப்பில் காணப்பட்டது.
நடிகவேள்
எம்.ஆர்.ராதா மன்றத்தில் தந்தை பெரியார் நினைவு நாள்
நிகழ்ச்சிகளின் அரங்க நிகழ்வில் முதல் நிகழ்வாக பெரியார் பன்னாட்ட மைப்பு அமெரிக்கா சார்பில் Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருது-2020Õ
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மருத்துவர் மீனாம் பாள் வழங்கினார். காணொலிமூலம் விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) தலை வர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன்தமிழ், பேராசிரியர் ரவிசங்கர் கண்ணபிரான் ஆகியோர் பங்கேற்றனர்.
விருதுபெற்ற
தொல்.திருமாவளவன் அவர்க ளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பய னாடை அணிவித்து
வாழ்த்துரை ஆற்றினார். சமூக நீதிக்கான கி.வீரமணி விருது
2020 பெற்றுக்கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் ஏற்புரை ஆற்றினார்.
தந்தைபெரியார்
நினைவு நாள் கருத்தரங்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமை யில் நடைபெற்றது. துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி வரவேற்றார்.
கழகத்துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற் றினார். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் து.அரிபரந்தாமன் கருத்தரங்க
உரையாற் றினார்.
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களுக்கு
Ôபெரியார் விருதுÕ வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. Ôதந்தைபெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்Õ புத்தகத்தை தோழர் தா.பாண்டியன் வெளியிட,
ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் பெற்றுக் கொண்டார். விருதுபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரை
ஆற்றினார்.பா.மணியம்மை இணைப்புரை
வழங்கி னார். விழா நிறைவில் அமைப்புச்செயலாளர் வி. பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
தந்தை
பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றோர்
கழகப்
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர்
வீ.குமரேசன், மோகனா வீரமணி, பிரச்சாரசெயலாளர் அ.அருள்மொழி, திமுக
வர்த் தகப்பிரிவு தலைவர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், புலவர் பா.வீரமணி, கவிஞர்
கண்மதியன், பேராசிரி
யர் ந.க.மங்களமுருகேசன்,
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, சென்னை மண் டல செயலாளர் தே.செ.கோபால், பெரியார்
நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர்
கி.சத்தியநாராயணன், துணை செயலாளர் தென்.மாறன், பொருளாளர் ச.சேரன், செல்லப்பா,
பன்னீர்செல்வம், தங்கமணி, அ.அருணாசலம், வீ.சனார்த்தனம், ஜெ.சனார்த்தனம், பெரியார்
மாணாக்கன், செல்வி பூஜா, ஆ.ராம் குமார்,
சீனிவாசன், கு.சோமசுந்தரம், மா.டில்லிபாபு, அ.வெங்கடேசன், பொன்.இராமச்சந்திரன், சிறீ ராம், ஆ.வே.நடராசன்
வடசென்னை
வழக்குரைஞர்
சு.குமாரதேவன் (மாவட்ட தலை வர்), தி,செ.கணேசன்
(மாவட்ட செயலாளர்), கி. இராமலிங்கம், சு.மும்மூர்த்தி, புரசை
சு.அன்புச் செல்வன், சி.பாஸ்கர், தளபதி
பாண்டியன், வ.தமிழ்ச்செல்வன், நா.பார்த்திபன்,
மு.டில்லிபாபு, கோ.தங்கமணி, தா.கருத்தோவியன், பா.கோபால கிருட்டிணன்
தென்சென்னை
மாவட்டம்
இரா.வில்வநாதன், டி.ஆர்.சேதுராமன்,
கோ.வீ. ராகவன், மு.ந.மதியழகன்,
மு.சேகர். ந.ராமச்சந்திரன், சா.தாமோதரன், மஞ்சநாதன், ஈ.குமார், சண்முகப்பிரியன்,
க.பவன்குமார், சிவசீலன், ச.துணைவேந்தன், மணித்துரை,
ச.சந்தோஷ், மயிலை பாலு, இ. மோகன், பாஸ்கர்,
ச.மகேந்திரன், விஜயராசு
தாம்பரம்
கழக மாவட்டம்
கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், மா.குணசேக ரன், ஊரப்பாக்கம் சீனிவாசன், பொய்யாமொழி, புஷ்பராஜ், பெரியார்செல்வன், பொழிசை கண் ணன், இலட்சுமிபதி, கூடுவாஞ்சேரி ராசு, பொழிசை கண்ணன், கிருட்டினமூர்த்தி, ரத்தினகுமார்
சோழிங்கநல்லூர்
கழக மாவட்டம்
ஜெயராமன்,
டி.தமிழ்இனியன், வசந்தா, வே.மணிகண்டன், மறைமலைநகர்
சிவகுரு, யா.இயேசு, ரா.பழனி, லா.கருணாநிதி
ஆவடி
மாவட்டம்
ஆவடி
மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர்
க.இளவரசன், முத்தழகு, அம்பத்தூர் இராமலிங்கம், ஆவடி தமிழ்மணி, கும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார், க.ச.கஇரணியன், செங்கை
சுந்தரம், போளூர் பன்னீர்செல்வம், கொரட்டூர் பன்னீர்செல்வம், கொரட்டூர் கோபால், வழக்
குரைஞர் ஜெ.துரைசாமி, பெரியார்
சமூக காப்பணி சி.காமராஜ்,
சோ.சுரேஷ், வடமணப்பாக்கம் வெ.இளஞ்செழியன்.
மகளிரணி
மகளிர் பாசறை
சி.வெற்றிச்செல்வி, க.பார்வதி, சே.மெ.மதிவதனி, டெய்சி
மணியம்மை, உமா, மீரா ஜெகதீசன், பூவைசெல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, த.மரகதமணி, பெரியார்செல்வி,
வளர்மதி, அஜந்தா, தங்கமணி, தங்கதனலட்சுமி, மணிமேகலை, மோக னப்பிரியா, சுமதி, முகப்பேர் செல்வி, யாழ்ஒளி, தங்கமணி, பேராசிரியர் அய்ஸ்வர்யா, அன்பு செல்வி, வெண்ணிலா, மேகலா, அகிலா, அருள்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிபிஅய்
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்ட
செயலா ளர்கள் எம்.எஸ்.மூர்த்தி, எம்.கருணாநிதி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன்,
ஏஅய்டி யுசி தலைவர் மு.சம்பத், துரைசாமி,
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சீ.சு. குமார்,
எஸ்.கே.சிவா, பாரி
மதிமுக
மதிமுக
துணைப்பொதுச்செயலாளர்
மல்லை சத்யா, அமைப்புச்செயலாளர் ஆ.வந்தியத்தேவன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், ஜீவன், டி.இராஜேந் திரன்,
கழகக்குமார், வழக்குரைஞர் சுப்பிர மணி, முராத் புகாரி, மல்லிகா தயாளன், தி.மு.இரா
ஜேந்திரன்
விடுதலை
சிறுத்தைகள் கட்சி
வன்னியரசு,
ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பொறுப்பாளர்கள் பலரும் தந்தைபெரியார் நினைவு நாள் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment