கோவையில் நடைபெற்ற பறையிசை பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

கோவையில் நடைபெற்ற பறையிசை பயிற்சி

கோவை, டிச. 15- திராவிடர் கழகம் சார்பில் பறையிசை பயிற்சி பட்டறை போத்தனூர் எம்.ஜி மண்டபத்தில் திராவிடர் கழக மண்டல செயலாளர் .சிற்றரசு தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது: தமிழரின் தொன்மையான இசை பறையிசையாகும்

காலங்காலமாக இந்த கருவியை இறப்புக்கான இசையாக மாற்றி அழித்த சூழ்நிலையில் இந்த இசை யின் பெருமையை எடுத்துச்சொல்லி இதில் இருந்து தான் உலகத்தின் அனைத்து இசைகளும் உருவானது என்பதால்  இந்த கலையை உலக அளவிற்கு கொண்டு சென்ற நிமிர்வு கலையகத்தின் பறையிசை பயிற்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகி றேன் இந்த பறையிசை பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந் துள்ள அனைவருக்கும் வாழ்த்து களை தெரிவித்து கொள்கிறேன் என்று உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனை வரையும் மாவட்ட மாணவர் கழக செயலாளர் தக கவுதமன் வரவேற்று உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் தி..செந்தில் நாதன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் இராசி பிரபாகரன்,  மண்டல இளைஞரணி செயலாளர், .பிரபாகரன், மண்டல மாணவர் கழக செயலாளர் மு.ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பறையிசை நிகழ்ச்சியை குறிச்சி வடக்கு பகுதி திமுக செயலாளர் எஸ்..காதர் தொடங்கி வைத்தார்.

நிமிர்வு கலையகம் பயிற்சியாளர் சக்தி பறை குறித்து விளக்கம். மற்றும் பறையிசை குறித்த வரலாறு. பறையிசையின் சமூகநிலை. இரண்டு நிலை கள். பறையை கையாளும் முறை. வணக்க அடி, மற்றும் முடிவு அடி, என பறையிசை நுணுக்கங்களை தெளிவாக எடுத்துச் சொல்லி பயிற்சி வழங்கினார்.

பறை இசை குறித்த பயிற்சியானது.. கேட்பேரை கிறங்க வைத்தது. பார் வையாளர்களாய் பங்கேற்றவர்கள் அனைவரையும் மயங்க வைத்தது.

பயிற்சியில் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள் மாணவ மாணவிகளின் உற்சாகம் காலை முதல் மாலை வரை குறையவே இல்லை...

அந்த அளவிற்கு பறையிசை பயிற்சி மிகவும் சிறப்பாக நிமிர்வு கலையக பயிற்சியாளர்களால் கற்றுக் கொடுக்க பட்டது.

10 க்கும் மேற்பட்ட பெரியார் பிஞ் சுகள் மற்றும் மாணவ மாணவிகள் என 40 மேற்பட்டோர் பறையிசை பயிற்சிப் பட்டறை வகுப்பில் பங் கேற்றனர்.

காலை 9 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை பிறகு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை என பறையிசை வகுப்பு மிக நேர்த்தியாக அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக கற்றுகொடுத்த நிமிர்வு ஒருங்கிணைப்பாளர்கள் சக்தி மற் றும் மு.ராகுல், வெ.யாழினி, உள்ளிட் டோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை  அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

காலை 11 மணிக்கு தேநீர், பிஸ்கட் அதேபோல மாலை 4 மணிக்கு தேநீர் மற்றும் சூடான  முட்டை பப்ஸ் கலந்துகொண்ட அனைவருக்கும் திமுக தெற்கு பகுதி செயலாளர் நா.கார்த்தி வழங்கினார்.

பறையிசை பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் கோவை மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் .சந்திரசேகர் தனது சொந்த செலவில் மதிய உண வாக மாட்டு கறி பிரியாணி விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

பறையிசை வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிபெற்ற மாணவ செல் வங்கள் அனைவருக்கும் திராவி டர் கழக மாவட்ட மகளிரணி தோழி யர் கவிதா, தேவிகா, மற்றும் .பிரபாகரன், தமிழ் முரசு, குமரேசன், பென்ராஜ், கயல் விழி, உள்ளிட்ட தோழர்கள் மூலம் பாராட்டு சான்றி தழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர். .பிர பாகரன் மற்றும் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர். இரா.உதயகுமார், தெற்கு பகுதி செயலாளர் நா.கார்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்கள் அனை வருக்கும் திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சி சிறக்க தனது பங்களிப்பாக பயனாடையினை திமுக இலக்கிய அணி சார்பில் சரவணன் வழங்கினார்.

நிகழ்வில் .பிலிப், சுகுமார், கோவை அன்பு, முகமது ஜின்னா, ஆட்டேராசு, உள்ளிட்ட திமுக தோழர்களும்,

மாநகர தலைவர் .வீரமணி. இளைஞரணி வெற்றிசெல் வன், சக்தி பழனியப்பன், தமிழ் நியூட்டன், .மு.ராஜா உள்ளிட்டோரும் பங் கேற்றனர்

முகநூல் நேரலையினை தோழர் குமரேசன் சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தார். 

நிகழ்ச்சி நிறைவாக வருகை தந்த தோழர்கள் சிறப்பு விருந்தினர்கள் பறையிசை பயிற்சி பெற்றதோழர்கள் மற்றும் நிகழ்ச்சி சிறக்க  நிதியுதவி உணவு தேநீர் உள்ளிட்டவைகளை வழங்கிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து திராவிடர் மாண வர் கழக வெ.யாழினி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

No comments:

Post a Comment