16.12.2020 அன்று பேருந்து பயணத்தில் என் அருகே வந்து ஒரு இளைஞர் அமர்ந்தார்.
சிறிது நேரம் அவரை கவனித்தேன். அவர் அலை பேசியை எடுத்து பார்க்க முயற்சித்தார்.
நான்: வணக்கம் படிச்சிட்டு இருக்கீங்களா? வேலைக்கு போறீங்களா? என்று கேட்டேன்...!
வேலைக்கு என்றார்..!
நான்: என்ன படிச்சி இருக்கீங்க?.. என்றேன்.
டிப்ளமோ.. என்றார்.
நான்: புத்தகம் படிப்பீர்களா?... என்றேன்.
ம்... என்றார்
நான்: சமீபத்தில் என்ன புத்தகம் படிச்சீங்க.. ? என்றேன்...
பொன்னியின் செல்வன்.. என்றார்..
நான்: திராவிடஇயக்கம் சார்ந்த புத்தகம் படிப்பீர் களா....? கேட்டேன்..
அவருக்கு புரியவில்லை யோசித்தார்...
நான்: இந்தியாவில் ஆரியம் திராவிடம் என இரண்டு சித்தாந்தம் இருக்கு... என்று சொல்லிக் கொண்டே..... தற் போது கழகம் வெளியிட்டுள்ள "மயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை!" புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன். "இதை படியுங்கள்" என்றேன்.
வாங்கி கொண்டு பக்கங்களை புரட்டினார்...
"டிக்கெட், டிக்கெட்" என்று எங்கள் நடத்துனர் அருகே வந்தார்.... அவர் டிக்கெட் எடுத்தார்....
நடத்துநரிடம் பிரஸ் பாஸ் என்று சொல்லி விட்டு அவரிடம் என் அடையாள அட்டையை காண்பித்து விட்டு அவரிடமும், "மயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை" புத்தகம் கொடுத்து.. "டூட்டி நேரத்தில் படிக்க வேண்டாம் ஓய்வாக இருக்கும் போது படியுங்கள்" என்றேன்.. சிரித்துக் கொண்டே நடத்துநர் வாங்கி கொண்டார்.! நடத்துநர் அவர் பணியை தொடர்ந்தார்.
அருகில் அமர்ந்திருந்தவர் என்னிடம் என்ன பத்திரிகை என்றார்?
நான்: உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் 'விடுதலை' என்றேன்.. தந்தை பெரியார் தொடங்கிய நாளேடு 86 ஆண்டுகளாக தொடர்ந்து தினசரி வெளிவந்து கொண்டு இருக்கிறது என்றேன்..
அதேபோல...
"'உண்மை' மாதம் இரு முறை இதழ் வெளிவருகிறது நீங்கள் கேள்விப்பட்டு இருக்கீங்களா..?" என்றேன்..
"இல்லை" என்று தலையாட்டினார்
நான்: இந்தியாவில் உள்ள இரண்டு சித்தாந்தம், திராவிடம், ஆரியம் என்றேன்..
"ம்.." என்றார்.
நான்: இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திரா விடர்கள்..
"ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியாவிற்குள் வந்தது ஆரியம்" என்றேன்..
இந்தியாவில் திராவிடர்கள் 97%, ஆரியர் 3% சதவீதம் ஆனா..
100இல் மூன்று பேர் உள்ளவர்கள் இந்தியாவில் ஆட்சி அதிகாரம் அரசு அதிகாரம் பெற காரணம் என்ன? அதற்கு காரணமாக இருப்பது எது?
அதற்கு காரணமாக இருப்பதுதான் கடவுள் மதம் ஜாதி... அதைத்தான் பெரியார் எதிர்த்தார்...
நாம் கீழ் ஜாதியா இருப்பதற்கும், பார்ப்பான் மேல் ஜாதியாக இருப்பதற்கும் காரணம் என்ன?
நாம் அடிமையாக இருப்பதற்கும் பார்ப்பான் ஆட்சி அதிகாரம் பெறுவதற்கும் காரணம் என்ன?
நம் மக்களுக்கு படிப்பு அறிவு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன?
இந்துமத தத்துவம் சொல்கிறது..
சூத்திரன் படிக்கக்கூடாது.. படித்தால் நாக்கை அறு.. படிப்பதை காதில் கேட்டால் ஈயத்தை காய்ச்சி ஊற்று.. என்கிறது..
இது கடவுள் சொன்னது.. இதை இந்து மதம் சொல்லுது.. இதையெல்லாம் நம்பியே வாழ்ந்தவர்கள் நம் தாத்தா பாட்டி காலம். அதனால் தான் நம் தாத்தா பாட்டி படிக்கவில்லை...
அனைவரும் கல்வி வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார்..
அப்ப காங்கிரசிலிருந்த தந்தை பெரியார் அவர்கள் வகுப்பு வாரி உரிமை வேண்டும் என கேட்டு பல முறை தொடர்ந்து தீர்மானங்கள் கொண்டு வருகிறார்..
ஒவ்வொரு முறையும் பார்ப்பனிய சூழ்ச்சியால் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்படுகிறது. பெரியார் வெகுண்டு எழுந்து இனி காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது என் முதல் வேலை என்று உறுதி எடுத்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெறியேறுகிறார்.
காங்கிரஸ் கட்சி ராஜாஜி ஆட்சியில் பகுதி நேர படிப்பு - பகுதி நேர தொழில் - குலக்கல்வி திட்டம் என்கிற பெயரில் கல்வி கூடங்கள் மூடப்படுகிறது..
தந்தை பெரியார் கல்விக்கூடங்கள் மூடப்படுவதை கடுமையாக எதிர்க்கிறார். தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்தார்.
அப்போது ஏற்பட்ட கடும் எதிர்ப்புக் காரணமாக இராஜகோபாலாச்சாரியார் பதவி விலகினார்.
இந்த சூழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் முதலமைச்சர் ஆக வாய்ப்பு ஏற்பட்டு பதவியேற்க காமராஜர் தயங்குகிறார்.
இதை அறிந்த தந்தை பெரியார் நேரடியாக காமராஜர் அவர்களை நேரில் சந்தித்து நீங்கள் நிச்சயம் பொறுப் பேற்க வேண்டும். நான் ஆதரிக்கிறேன் என்று வலியுறுத் தினார். காமராஜர் தயக்கத்துடன் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து வந்த தேர்தலில் பெரியார் அவர்கள் காமராஜர் அவர்களை ஆதரித்து கடுமையாக பிரச்சாரம் செய்தார். அதன் காரணமாக காமராஜர் வெற்றி பெறுகிறார்.
தந்தை பெரியார் கோரிக்கையை ஏற்று ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை காமராசர் ரத்து செய்தார்.
தமிழக மெங்கும் கல்வி கூடங்களை திறந்து வைத்தார். அதனால்தான் கல்வி வள்ளல் காமராசர் என போற்றப் படுகிறார். அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்தத் தலை வர் தந்தை பெரியார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்து வத்தால் ஆரம்ப கல்வி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகள் என தமிழகமெங்கும் உருவானது.
வட மாநிலங்களைவிட தமிழகத்தில் கல்வி அறிவு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது திராவிட இயக் கங்கள். அதற்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணமாக அமைந்தது. அதனால் தான் நாம் இன்று படித்த பட்டதாரிகள் ஆனோம். இதுதான் திராவிடம் என்றேன்.
நம்மை படிக்க கூடாதுன்னு சொன்னது ஆரியம்
நம் அனைவரையும் படிக்க சொன்னது திராவிடம்.
படிக்கிற வாய்ப்பை தடுப்பது ஆரியம்
படிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்தது திராவிடம்.
அப்ப ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி சமஸ்கிருதம் தெரிஞ்சா தான் மருத்துவம் படிக்க முடியும் என சொன்னான்.
இப்பவும் பாஜக ஆட்சியில பாருங்க தகுதி திறமை என்று சொல்லி 'நீட்' தேர்வு வைச்சி மருத்துவம் படிக்க விடாம தடுக்குறான் இதான் ஆரியம்..
இப்ப பாத்தா..
கமல் ரஜினி அரசியலுக்கு வராங்க..
ஒருத்தர் தனது கொள்கையை சொன்னா காப்பி அடிச்சு விடுவார்களுன்னு... சொல்றார்..
ம.நீ.ம. நடுநிலை... இருக்கும்...
ஒரு இடத்தில் இருவருக்கும் இடையே சண்டை நடைபெறுகிறது.
இருவரில் ஒருவர் நல்லவன். அப்ப இன்னொருத்தன் கெட்டவன்.
மய்யம்.. என்ன சொல்றார்...
நடுநிலைவாதி.. ஏம்பா சண்டை போடாதீங்க... என பொதுவா சொல்றார்
குற்றம் செய்தவன் யாருன்னு தெரிஞ்சும் அதனால் பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்லாம... தப்பு செஞ்சவனை கண்டிக்கிற தைரியம் இல்லாம... நடுநிலை என்கிற பெயரில் பாதிக்கப்பட்ட வரையும் பாதிப்பு ஏற்படுத்தியவரையும் ஒரே மாதிரி பார்ப்பதுதான் நடுநிலையெனில் இது மிக மோசமான செயல் அல்லவா. இதுதான் மய்யம். இதுதான் ஆரியம் என்றேன்....
திராவிடர் கழகத்தை பொறுத்தவரை நாங்க தேர்தல் நிக்க மாட்டோம். எங்களுக்கு ஓட்டு போடுங்கனு கேட்க மாட்டோம். ஆனா யார் ஆட்சிக்கு வந்தால் நம்ம எதிர்கால சந்ததிகள் நல்லா வாழமுடியும் அப்படின் னு நாங்க சொல்றோம். பெரியார் அதைத்தான் செஞ்சார்.
இப்ப நாங்க திராவிடர் கழகம். எங்கள் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் இப்ப அதைத்தான் சொல்றோம்.
வர்ற தேர்தல்ல திமுக திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரணும். நம்ம குழந்தைகள் எல்லாம் கல்வி பெறணும் ஆட்சி அதிகாரம், அரசு வேலை வாய்ப்பை பெறணும். அதான் எங்க கொள்கை.
அதைத்தான் நாங்கள் இப்ப பிரச்சாரமாக முன்னெ டுக்கிறோம். அந்த வெளியீடு தான் "மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை" புத்தகம் மறக்காமல் படியுங்கள் என்றேன்.
இன்னொன்று சொல்றேன். தந்தை பெரியார் சொல்லுவார், "யார் எதைசொன்னாலும் நம்பாதே!" உன் அறிவைக் கொண்டு யோசி "உனக்கு சரியெனபட்டால் எடுத்துக் கொள் - இல்லேன்னா விட்டு விடு" என்று சொல்வார்.
நான் பேசுனேன். "சொல்கிறதனாலேயே நம்பா தீங்க நீங்கள் சிந்திச்சி பாருங்கள்" என்றேன். சொல்லி விட்டு "நான் ரொம்ப பேசிட்டேன். ஏதாவது தொந்தரவா இருந்தா வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்" என்றேன்.
"இல்லை இல்லை நீங்க சொன்னது எல்லாம் ரொம்ப நல்ல விசயம்" என்றார்..
நான்: உங்களுக்கு இந்த திராவிட கொள்கைகளை குறித்து தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்தா உங்கள் அலைபேசி எண் தரலாமே..என்றேன்..
மகிழ்ச்சியோடு தந்தார்..
நான்: நீங்கள் முக நூலில் இருக்கீங்களா என்று கேட்டேன்?
"ஆம்" என்றார்..
நான்: எனது முகநூல் முகவரியை தந்து இதில் பாருங்கள் இயக்கம் சார்ந்த தற்போதைய செய்திகள் தினசரி வரும் என்றேன்..
"கண்டிப்பாக" என்றார்..
அவர் இறங்குமிடம் வந்தது என்னிடம் விடைபெற்றுக் கொண்டார்...
பேருந்து நின்ற பின் கீழே இறங்கி மீண்டும் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே கையசைத்து சென்றார்..
மகிழ்ச்சியோடு நானும் கையசைத்து விடை பெற்றேன்!
எங்கேயும் எப்போதும் சொல்வோம்!
திராவிடம் வெல்லும்
- அ.மு.ராஜா,
'விடுதலை' மாவட்டச் செய்தியாளர் கோவை

No comments:
Post a Comment