நாகை நத்தம் நாத்திக. சாக்ரடீஸ் மறைவு ஏற்க முடியாத இழப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

நாகை நத்தம் நாத்திக. சாக்ரடீஸ் மறைவு ஏற்க முடியாத இழப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், நத்தம் சுயமரியாதை சுடரொளி சி.பி கண்ணு அவர்களின் பேரனும், சி.பி. நாத்திகன் அவர்களின் மூத்தமகனுமான நாத்திக.சாக்ரடீஸ் (வயது 37) (திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர்)

17-12-2020 அன்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்று (18-12-2020) மதியம் 2 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.

திருப்பூரில் பணியாற்றியபோதும் இளைஞரணி மாவட்ட பொறுப்பேற்று கழகப் பணியாற்றியவர். இந்த இளம் வயதில் அவர் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல - கழகத்திற்கும் முக்கிய இழப்பே!

அவரை இழந்து வாடும் அவரது குழந்தைகள்அறிவாளன், அறநெறியன், அவரது துணைவியார் சூரியா, தந்தை நாத்திகன், தாய் கண்ணகி, சகோதரர்கள் நாத்திக. பொய்யா மொழி, நாத்திக.பொன்முடி ஆகியோருக்கும், கழகத் தோழர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கழகத்தின் சார்பிலும், குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறோம்

 

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

18.12.2020

No comments:

Post a Comment