ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி!

ஜெய்ப்பூர், டிச. 15 - ராஜஸ்தானில் நகர்ப் புற உள்ளாட்சி அமைப் புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்த லுக்காக 2,622 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டன. மொத்தம் 14.32 லட்சம் வாக்கா ளர்கள் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய் தனர். 7,249 வேட்பா ளர்கள் களத்தில் நின் றனர். இந்த தேர்தலுக் கான முடிவுகள் வெளி யிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 1,775 வார்டு கவுன்சிலர் பதவி களில் ஆளும் காங்கிரஸ் 620 இடங்களிலும், பா... 548 இடங்களி லும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 595 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

ராஜஸ்தானின் 12 மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஏழு வேட்பாளர்கள், சி.பி.அய். மற்றும் சி.பி.அய்.(எம்) தலா இரண்டு மற்றும் ராஷ்டிரீய லோகாந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி.) ஒருவர் வெற்றி பெற்ற தாக மாநில தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் அறிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment