மும்பை, டிச. 16 ஏபிஎம்சி எனப்படும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தில், விவசாயிகளின் நலன்களுக்காகவே திருத்தம் கொண்டுவர விரும் பினார் சரத்பவார் என்றுள்ளார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.
காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய வேளாண் மைத் துறை அமைச்சராக இருந்தபோது, விவசாயத் துறையில் தனியாரும் பங்களிக்கும் வகையில், ஏபிஎம்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்று முனைந்தார் சரத் பவார். இது தொடர்பாக, அவர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினார்.
அவரின், அந்த பழைய நடவடிக்கையை இப்போது சுட்டிக் காட்டி, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவரைக் குற்றம் சுமத்துகிறது பாரதீய ஜனதா. இந்நிலையில், பவாருக்கு ஆதரவாக தற்போது கருத்து தெரிவித்துள்ளார் சிவசேனாவின் சஞ்சய் ராவத்.
“சரத் பவார், அந்த முயற்சியை மேற்கொண்டது விவசாயிகளின் நலனுக்காகவே. அப்போது, அம் பானி, அதானி போன்ற கார்ப் பரேட் பெருந்தலைகள் வேளாண் துறையில் கால் வைக்கவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
ஆனால், இப்போதைய புதிய சட்டங்கள் விவசாயத் துறையை சுடுகாடாக மாற்றுவதோடு, ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் நலன்களையே அழித்துவிடும்” என்றுள்ளார் ராவத்.
பழைமைக்குத் தள்ளும் எந்த ஒரு முடிவையும் ஆதரிக்க மாட்டோம் கருநாடகா உயர்நீதிமன்றம்
பெங்களூரு, டிச.16 இந்து அல்லாதவர்கள், எச்ஆர்அய்சிஇ எனப்படும் கருநாடகா இந்து மத நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சட் டத்தின்கீழ் வரும் பணிகளில், பணிசெய்ய தடை விதிக்க வேண்டுமென்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது அம்மாநில உயர்நீதிமன்றம்.
மாநிலத்தை, 100 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் எந்தவொரு மனுவையும் தாங்கள் ஏற்பதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
நமது நாட்டின் அரசமைப்பு சட்டம் நடை முறைக்கு வந்தபிறகு, இதுபோன்ற மனுக்களை நாங்கள் ஏற்பதில்லை. அரசமைப்பு என்று சில அம்சங்கள் அறியப்படுகின்றன மற்றும் அரசிய லமைப்பு தத்துவம் என்றும் சில அம்சங்கள் அறியப் படுகின்றன.
நம்மை 100 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் செல்லும் எந்தவொரு விஷயத்தையும் நாம் ஏற்ப தில்லை” என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளது தலைமை நீதிபதி அபாய் எஸ் ஒகா அடங்கிய அமர்வு.
No comments:
Post a Comment