இயக்க செயல் வீரர் வில்லிவாக்கம் சிங்காரவேலு மறைவுக்கு வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

இயக்க செயல் வீரர் வில்லிவாக்கம் சிங்காரவேலு மறைவுக்கு வீர வணக்கம்!

வில்லிவாக்கம் வட்டாரத்தில் மிகத் தீவிரமாக இயக்கச் செயல் பாட்டாளராக - இளைஞரணி வீரராகத் திகழ்ந்தவர் தோழர் அர. சிங்காரவேலு (வயது 72). அய்.சி.எப்.பில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவருடைய அன்னையார் கழகத்தில் மிகத் தீவிரமாக இருந்தவர். சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தோழர் சிங்காரவேலு அய்.சி.எப். மருத்துவமனையில் நேற்று (15.12.2020) பிற்பகல் 2.40 மணியளவில் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவரது பிரிவால் துயருறும் அவரது வாழ்விணையருக்கும், இரண்டு மகன்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

16.12.2020          

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,  சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ. கோபால், கி. இராமலிங்கம், கலைமணி ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தொடர்புக்கு:  9444436421

No comments:

Post a Comment