பனகல் அரசர் பி.ராமராய நிங்கார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

பனகல் அரசர் பி.ராமராய நிங்கார்

பனகல் அரசர் பி.ராமராய நிங்கார்    தோற்றம்: 07.-07.-1866 & மறைவு: 16-.12.1928 

பனகல் அரசரின் உண்மையான பெயர் பி. ராமராய நிங்கார். இவரின் பூர்வீகம் ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள 'பனகல்லு' என்னும் ஊராகும். இருந்தாலும் இவருடைய பெயர் ராஜா ஆஃப் பனகல். இவர் 1866 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவர் 1892 ஆம் ஆண்டு மாநில கல்லூரியில் பி.. (வேதியியல்) பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் மற்றும் தெலுங்கில் எம்.. பட்டம் பெற்றார். பம்மல் சம்பந்த முதலியார் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நல்ல படிப்பாளி, அறிவாளி வசதி நிறைந்த ஜமீன்தார், செல்வாக்கு நிறைந்தவர். ஜஸ்டீஸ் - பிரமுகர்களில் ஒருவர். இவர் கல்வி, பொதுப் பணித்துறை ஆகியவற்றில் அநேக சீரமைப்புகளைச் செய்தார்.டிசம்பர் 1920 முதல் ஜிலை 1921 வரை மதராஸ் மாகாணத்தில் நீதிக் கட்சியின் சார்பாக மந்திரியாக இருந்தார். ஜூலை 1921 முதல் செப்டம்பர் 1921 வரை பனகல் அரசர் மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தார். இவர் ஆட்சியில் அமுலுக்கு வந்த முக்கியமான சட்டத்திற்கு "ஹிந்து ரிலீஜியஸ் எண்டோன்மெண்ட் ஆக்ட்" என்று பெயர். இவர் கீழ்ப்பாக்கத்தில் காலேஜ் ஆஃப் இந்தியன் மெடிசன் என்ற நாட்டு வைத்தியமுறைக் கல்லூரி அமைக்க உறுதுணையாக இருந்தார். இவர் நாட்டுக்குச் செய்த பணிகளைக் கவுரவிக்கும் முறையில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு கே.ஸி... K.C.I.E. 'நைட்கம்பானியன் ஆஃப் இண்டியன் எம்ஃபயர் 'என்ற விருதை அளித்தது. இவர் டிசம்பர் 16, 1928இல் இயற்கை எய்தினார்.

 

 


No comments:

Post a Comment