மலேசிய திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் கண்ட ஒப்பற்ற தளபதி தலைவர் அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் இந்த சமுதாயத்தின் ஏற்ற தாழ்வு நிலை அகற்றி,ஒரு பகுத்தறிவு சமுதாயமாக மாற்றமடைய போராடியவர்.
அந்த பகுத்தறிவு சிங்கம் மறைவுக்குப்பின், அன்னை மணியம்மையார் பொறுப்பேற்றார்; அவர் மறைவுக்குப்பின் தளபதி அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்றும், நாளையும் வெற்றி நடைப்பாதையில் வீறுகொண்ட சிங்கமாக, உலக அரங்கில் போற்றக்கூடிய ஒரு மனிதராகத் திகழ்வதும், திகழப் போவதும் எவராலும் எட்டிப் பிடிக்க முடியாத பெருநிலையாகும்.
அய்யாவை 1988இல், மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத்தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி தலைமையில் தமிழகம் சென்று, விடுதலையில் சந்தித்தப்போதும் சரி,
2018இல், என் தலைமையில் 'விடுதலை'யில் ஆசிரியரை சந்தித்தபோதும் சரி, அய்யாவின் வரவேற்ற பண்பு மாறவில்லை.
அந்த அளவிற்கு ம. தி. க வோடு தொடர்புகள் நீடித்த நிலையிலே உள்ளது என்பதற்கு சான்று, 2019இல் ஆசிரியர் மலேசியா வந்தபோது திராவிடர் அமைப்புகளை ஒரே அமைப்பாக செயல்படும் சூழலை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு செயல்பட வழிவகுத்த பெருந்தகையாவார்.
இன்னும் கூட தொடரலாம், பிரிதொரு வாய்ப்பில் பயன்படுத்திக்கொள்கிறேன்.
தலைவர் அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்திட , பிறந்த நாளில் உளமார,நீடூழி வாழ்கவென மலேசிய திராவிடர் கழகத் தோழர்களின் சார்பிலும், திராவிடர் கூட்டமைப்பின் தோழர்களின் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
ச. த. அண்ணாமலை, தேசியத் தலைவர்,
பொன்.பொன்வாசகம்,
தேசிய பொதுச் செயலாளர்
---------------------------
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் 88ஆம் ஆண்டு அகவைநாள் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர், சுயமரியாதைச் சுடரொளி தமிழர் தலைவர் 'கருத்துக்கனல்' அய்யா அவர்களின் பிறந்த நாள் இன்று 2-12-2020 சுயமரியாதை நாள். அவரின் தலைமையை ஏற்று செயல்படும் நமக்கு பெருமை. அய்யா அவர்களின் தொண்டறம் தொடரட்டும். வாழியத் தலைவர் வாழியவே.
நாக பஞ்சு, தேசியத் தலைவர்
ச. அன்பரசன், பொதுச் செயலாளர்
---------------------------
பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி - 21.
சமத்துவ உலகம் படைக்க பல்லாண்டு வாழ்க!
தன்னலம் துறந்த தொண்டறப் பெற்றோரின்
இலட்சியப்பணி முடிக்கும் இனமானத் தலைவரே!
தங்களின் ஆயுள் நீட்சிதான்
திராவிடத் தமிழினத்தின் மீட்சி!
பகுத்தறிவு உலகத்திற்கான வளர்ச்சி!
குலக்கல்வி குன்றேறி அமரும்
என்ற குள்ளநரிக் கூட்டத்தினை
கூண்டோடு ஒழித்திட நீர் வாழ வேண்டும்!
மனுதர்மம் மாய்ந்திடவும்
சமதர்மம் ஓங்கிடவும் நீர் வாழ வேண்டும்!
கரோனா
நிவர்
இன்னும் எத்தனை எத்தனை பேரிடர்களையும்
மிஞ்ஞியது பிறவி பேதம்!
அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்திட
பேதமில்லா சமத்துவ உலகம் படைத்திட
நீவீர் பல்லாண்டு வாழ வேண்டும்!
- முதல்வர், பேராசிரியர்கள்
மற்றும் பணியாளர்கள்
-------------------------
Periyar International, Malaysia Chapter
Dear Sir,
We take this opportunity to wish you all the best on your 88th birthday. We admire your fearless, invaluable and mesmerizing services to not only to the Tamils living all over the world but to the mankind , carrying the Periyar's torch of humanity.
Thank you,
இந்த வேளையில் தங்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களின் எதற்கும், எவர்க்கும் அஞ்சாத, விலைமதிப்பற்ற, எல்லோராலும் போற்றப்படுகின்ற சேவை இவ்வுலகில் பல நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் , பெரியாரின் மனித நேயம் எனும் ஒளி விளக்கை மிகச் சிறப்பான முறையில் மனிதகுலத்திற்கு கொண்டு செல்லும் தங்களின் பணி மேலும் சிறக்க பணிவோடு விழைகின்றோம்.
Warm Regards.
M.Govindasamy.
Periyar International (Malaysia) President.
Association of Agricultural Executives, Sabah, Malaysia President.
------------------------
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
டிசம்பர் 2: சமூக நீதிப் போராளி ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களின் 88-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நமது வாழ்த்துச் செய்தி:
நமது வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள், திராவிடர் அனைவர்க்கும் மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்த நாள். அறிவும் மானமும் பெற்று சுயமரியாதையோடு திகழ விரும்பும் அனைவர்க்கும் உரிய நாள்.
எந்த சூழலிலும் தொய்வின்றி, தொலை நோக்கோடு, அய்யாவின் அடிச்சுவட்டில், திராவிடர் இயக்கத்தைக் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக, தோழர்களை வழி நடத்தும் திராவிடர் இயக்கத்தின் தளகர்த்தர் ஆசிரியர் அவர்கள், நூற்றாண்டு கடந்து மேலும் பல ஆண்டுகள் திராவிட சமூகத்தை வழி நடத்தவும், சமூக நீதியை வென்றிடவும் அவர்தம் பிறந்த நாளில் வாழ்த்தினை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment