வேலூர், ஜன. 4- தமிழகத்தில் சென்னை புழல், திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை, மதுரை உள்ளிட்ட 9 மத்திய சிறைச்சாலைகள், பெண்களுக்காக 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறை, 88 ஆண் களுக்கான கிளைச்சிறை, 8 பெண்களுக்கான கிளைச்சிறை, 2 ஆண் களுக்கான தனி கிளைச்சிறை, 12 சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, 3 திறந்த வெளிச்சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன.
இவற்றில்
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட் டுள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆஸ்துமா, மூச்சு திணறல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகளால் மருத்துவமனைகளில் அவ்வப்போது அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தமிழக சிறைகளில் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு மட்டும் 70 கைதிகள் இறந்துள்ளனர்.
வேலூர்
மத்திய சிறையில் மட்டும் கடந்தாண்டு 8 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது குளிர்காலம் என்பதால் 'ஆஸ்துமா' நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே 'ஆஸ்துமா'வால் அவதிப்படும் கைதிகளுக்கு போதிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு தீவிர மாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகுதி
நேர துப்புரவு பணியாளர்
ஊராட்சி
மன்றத் தலைவரானார்
திருவனந்தபுரம்,
ஜன.4- கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பத்தனபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக துப்புரவுப்பணியாளராக பணிசெய்துவந்தவர் ஆனந்தவல்லி (வயது 46).
தாழ்த்தப்பட்ட
வகுப்பைச்சேர்ந்தவரான
ஆனந்தவல்லி கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார். துப்புரவுப்பணி செய்த அதே அலுவலகத்தில் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதற்காக அவர் தம் கட்சியில் மட்டுமே இது சாத்தியம் என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். பெயிண்ட்டரான அவர் கணவர் அதே கட்சியின் தொண்டராக இருந்து வருபவர் ஆவார். 2011ஆம் ஆண்டு முதல் தற்காலிக துப்புரவு பணியாளராக ரூ.இரண்டாயிரம் ஊதியம்
பெற்ற ஆனந்தவல்லி தற்பொழுது ரூ.ஆறாயிரம் ஊதியத்
துடன் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
No comments:
Post a Comment