செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 4, 2021

செய்தியும், சிந்தனையும்....!

தலையெழுத்து என்பார்களோ!

.பி.யில் மயான கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் பரிதாபமாய் உயிரிழப்பு.

பிணத்தை எரியூட்டச் சென்றவர்கள் பிணமான சோகம்! ஒரு மயானத்தைக் கூட சரிவரப் பராமரிக்க முடியாத ஓர் ஆட்சிதான் ஆங்கே. மாண்டவர்களின் தலையெழுத்து என்று ஹிந்து தர்மம் பேசினாலும் பேசுவார்கள் - யார் கண்டது?

மக்களாட்சியா?

மினி கிளினிக்'கில் பணியாற்ற விண்ணப்பிக்கும் செவிலியர்கள், அரசு வேலையாக நிரந்தரம் செய்யக் கோரமாட்டேன் என்று எழுதி கொடுக்கவேண்டுமாம்: - தமிழக அரசு ஆணை.

ஆகட்டும் சாமி!' என்ற ஆண்டான் அடிமைச் சாசனம் இந்த 21 ஆம் நூற்றாண்டிலுமா?

தேர்தல் தந்திரம்!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது, அரசியல் கட்சியினர் தலையீடு இருக்கக் கூடாது: - ஊழியர்கள் கோரிக்கை

இதன் பொருள் என்ன? ஆளும் கட்சியினர் ரேசன் கடைகளை ஆக்கிரமித்து ஏதோ இந்த உதவிகளை அவர்களே செய்வதாகக் காட்டும் அரசியல், தேர்தல் நோக்கம்தானே!

பொய் சொல்வோர் யார்?

கடவுள்பற்றி அவதூறு பேசியதாக பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாருகி கைது!

கடவுள் உண்டு என்று பொய் சொல்பவர்களைத்தான் நியாயமாக கைது செய்யவேண்டும்.

அமெரிக்கா சென்ற பீகார் மாநில தேர்தல் அதிகாரிகள்

அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிட எதிர்ப்பு.

ஒருக்கால் அமெரிக்காவிலும் பீகார் மாநிலத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகள் போய் இருக்கிறார்களோ!

மந்திரி ஆகி இருப்பார்களே!

பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடிப்பு - 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்.

இந்தியாவாக இருந்தால், மாற்று மதக் கோவில்களை இடித்தவர்கள் மந்திரிகள் ஆகியிருப்பார்களே!

கண்டவர்கள் எல்லாம் வேலையில் சேரலாமா?

சென்னை அய்.அய்.டி.,க்கான பணிகளுக்கு மும்பையில் தேர்வு மய்யமா? மதுரை எம்.பி., வெங்கடேசன் மத்திய அமைச்சருக்குக் கடிதம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்நீட்' தேர்வு எழுதிட அயல் மாநிலங்களில் மய்யம் ஏற்படுத்தப்படவில்லையா?

கண்டவர்களை எல்லாம் வேலைக்கு எடுத்துவிட முடியுமா பா... ஆட்சியில்?

No comments:

Post a Comment