உருமாறிய கரோனா தொற்றுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 4, 2021

உருமாறிய கரோனா தொற்றுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தலாம்

 சுகாதாரத் துறை செயலாளர்

சென்னை, ஜன.4- உருமாறிய கரோனா விற்கும் தற்போது அனுமதி அளிக்கப் பட்டுள்ள கரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என தமிழக  சுகா தாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று (3.1.2021) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் தயாராக உள்ளது. ஒரு வாரத்திற்குள் மாநிலங்களுக்கு தடுப்பு ஊசி கிடைக்கும். முன்னுரிமை அடிப்படையில் 6 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப் படும். இதனைத் தொடர்ந்து 50 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர் களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை  வழங்கப்படும். முதியோர் அதிகம் உள்ள மாவட்டங்களில் அதிக அளவு தடுப்பு மருந்து கிடைக்கும்.

கிண்டியில் உள்ள தனியார் நட்சத் திர விடுதியில் 600 மாதிரிகளில் 97 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது.  எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 232 பேருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. அனைத்து நட்சத்திர விடுதிகளையும் தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட ஒருவர் குணமாகி வருகிறார். உருமாறிய கரோனாவிற்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த முடியும். மாஸ்க், தனி மனித இடைவெளியை கடைப்பிடித் தால் எந்த கரோனாவும் வராது. இந்த ஆண்டு மட்டும் 1.6 கோடி கரோனா தடுப்பு மருந்து போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment