கரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 16,375 பேர் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 5, 2021

கரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 16,375 பேர் பாதிப்பு

புதுடில்லி,ஜன.5- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வில் புதிதாக 16,375 பேர் பாதிக் கப்பட்டனர்  என மத்திய சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,375 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,03,56,845ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 99,75,958 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29,091 பேர் குண மடைந்துள்ளனர்.   சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 13 -வது நாளாக 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 201 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,49,850 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ஆம் தேதி 50 லட்சத் தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ஆம் தேதி 70 லட்சத் தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ஆம் தேதி 90 லட்சத்தையும், டிசம்பர் 19-ஆம் தேதி ஒரு கோடியையும் கடந்துள் ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment