இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 5, 2021

இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்,ஜன.5- கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக  கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.

எனினும் புதிய வகை கரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவியதால், இங்கி லாந்து  தடுமாறியது. ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு புறம் வைரஸ் பரவல் வேகமாக உள்ளது.  இதையடுத்து,  இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந் நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்தார். ஆறு வாரங் களுக்கு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனத் தெரிகிறது. புதன் கிழமை முதல் பள்ளிகள்  மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்காட்லாந்தும் இதேபோன்ற  ஊரடங்கை அறிவித்துள் ளது.

இங்கிலாந்து மக்கள் பத்திரமாக தங்கள் குடியிருப்பிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், நாட்டில் அமலுக்கு வரும் இந்த ஊரடங்கு புதிய வகை கரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது அமல்படுத் தப்பட்டுள்ள ஊரடங்கானது கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அமல் படுத்தப்பட்டிருந்ததைப் போல மிக கடுமையானதாக இருக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment