"தமிழ்நாடும் தேர்தல் அரசியலும்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கடந்த 2ஆம் தேதி காணொலி மூலம் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
நடக்கவிருக்கும்
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் - சமூகநீதிக்கும் மதச் சார்பின்மைக்கும், அதற்கு எதிரான சக்திகளுக்கும், அதற்குத் துணைப் போகும் - சக்திகளுக்கும் கட்சிகளுக்குமிடையே நடைபெற உள்ள தேர்தலாகும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பச்சையாகவே கூறி வருகிறார். தற்போதைய இடஒதுக்கீடு முறை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்.
நடைமுறையில்
இருந்துவரும் தாழ்த்தப்பட்டவர்கள் பிற் படுத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படியாக உள்ள இடஒதுக் கீட்டின் விகிதாசாரம் பூர்த்தி செய்யப்படவில்லை.
27 விழுக்காடு
இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு
உரியது என்றாலும் பகுதி அளவுக்குத்தான் பூர்த்தி செய்யப்படு கின்றது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15
விழுக்காடு, பழங்குடியின மக்களுக்கு ஏழரை விழுக்காடு என்பது சட்டப்படியானது என்றாலும் அதற்கான இடங்கள் பூர்த்தி செய்யப்படுவது கிடையாது. இந்த நிலையில், இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எவ்வளவுப் பெரிய அநீதி.
அதே
நேரத்தில் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல் என்பது சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், 10 விழுக்காடு இடங்கள் பொருளா தாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்பதை அவசர கதியில் மத்திய பிஜேபி தலைமையிலான அரசு செயல்படுத்தியது எப்படி?
வேறு
சில வழக்குகளில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறிக் காரணம் காட்டி, இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு முட் டுக்கட்டை போடும் மோடி தலைமையிலான அரசு இந்தப்
பத்து சதவீதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது எப்படி செயல்படுத்துகிறது? இதற்கான நியாயமான பதில் கிடையவே கிடையாது.
தாழ்த்தப்பட்டவர்களும்,
பிற்படுத்தப்பட்டவர்களும்
இந் துக்கள் என்று கோபுரம் ஏறிக் கூச்சல் போடும் கூட்டம், அந்தத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,
பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்
இடஒதுக்கீடு அளிப்பதற்குத் தடையாக நிற்பது ஏன்? ஏன்?
தமிழ்நாட்டில்
நாம் எழுப்பும் இந்தக் கேள்வியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்களும்,
பிற்படுத்தப்பட்டவர்களும்
சிறுபான்மையினரும் தானே இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள்? அவர்களுக்குத் துரோகம் செய்யும் பா.ஜ.க.வை அரசிய லில்
ஆதரிக்கலாமா? வாக்களிக்கலாமா? என்ற வினா இந்தியா முழுவதும் சுழன்றடிக்கட்டும்!
குறிப்பாக
தேசியக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் எல்லா மாநிலங்களிலும் இந்த எதிர்ப்புக் குரலைப் பட்டி தொட்டிகள் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும். பா.ஜ.க.
என்னும் மதவாத சக்தியை வீழ்த்த இதைவிட வலிமை வாய்ந்த ஆயுதம் எதுவும் இருக்க முடியாது.
பீகார்
மாநிலத் தேர்தலில் இந்தப் பிரச்சினையை முன் வைத்திருந்தால், பிற்படுத்தப்பட்டோர் பெரும்பான்மையாக உள்ள அம்மாநிலத்தின் தேர்தல் முடிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினையை முன் னெடுத்துப் பிரச்சாரம் செய்வதுபோல, மற்ற மாநிலங்களில் செயல்படாதது - மிகப் பெரிய குறைபாடாகும். உயர் ஜாதி ஆதிக்கக் கூட்டத்திற்கு இதுதான் வசதியாகப் போய்விட்டது.
ஒருக்கால்
லாலு பிரசாத் வெளியில் இருந்திருந்தால் இந்தப்
பிரச்சினையைப் பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் கொண்டு சென்று இருப்பார்.
மேற்கு
வங்கத்தில் பிற்படுத்தப்பட்வர்களுக்கு இடஒதுக்கீடு என்ற பிரச்சினையே எழவில்லை. மண்டல் குழு அறிக்கையில் கூட, மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டி யலே இல்லை என்று குறிப்பிட்டு இருப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
நடக்க
இருக்கும் மாநிலத் தேர்தலிலாவது இந்தப் பிரச்சினை முன்னிலைப்படுத்தப்படுமா என்று தெரியவில்லை.
கேரள
மாநிலமும் கிட்டத்தட்ட மேற்கு வங்காளத்தை ஒத்து இருக்கிறது. ஜாதி என்பது இந்தியத் துணைக் கண்டத்திற்கே பொதுவானது தானே - ஜாதி காரணமாக கல்வி உரிமை, உத்தி யோக வாய்ப்பு மறுக்கப்பட்டதும் உண்மைதானே! அப்படி இருக்கும்போது இடதுசாரிகள் அதனை முன்னிலைப்படுத் தாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
வரும்
தேர்தலில் அவ்விரு மாநிலங்களின் கவனத்துக்குத் தேசிய கட்சிகள் கொண்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும். மத்திய அரசு உயர் ஜாதி ஆதிக்க அரசு என்பதற்கான கார ணங்களை எடுத்துக் கூறிட வேண்டும்.
தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை பா.ஜ.க.
தனது தேசிய கொள்கையான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான நிலைப்பாடு பற்றி தமிழ்நாட்டில் வாயைத் திறக்காது - ஏன் மூச்சும் விடாது.
இந்த
இரட்டை வேடத்தையும் தமிழ்நாட்டில் அம்பலப்படுத் துவோம். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இதனைக் கவனத்தில் கொள்ளும் என்பதில் அய்யமில்லை. மேலும் இதில் தூண்டு சக்தியாக திராவிடர் கழகமும் அதன் தலைவரும் இருப்பார்கள்.
திராவிடர்
கழகத் தலைவர் காணொலியில் வலியுறுத்திய சமூகநீதி,
மதச்சார்பின்மை என்பதையும்விட பிற்போக்குச் சக்திகளையும் துணைப்போகும் கட்சிகளையும் வீழ்த்தும் வலிமையான ஆயுதங்கள் வேறு இல்லை. நினைவிருக்கட்டும்!
No comments:
Post a Comment