கடலூர்,
ஜன. 4- கடலூர் நகர கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம், கடலூர் ஓட்டல் துரை கருத்தரங்க அறையில் 3.1.2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர் தென்.சிவக் குமார் தலைமையில், மண்டல செயலாளர் தாமோதரன் முன்னிலையில் நடந்தது.
நகர
செயலாளர் சின்னதுரை வரவேற்று பேசினார். தோழர் பால்கி "கீதையின் மறுபக்கம்" பற்றியும், வழக்குரைஞர் வனராசு "வாழ்வியல் சிந்தனைகள்" பற்றியும், வழக்குரைஞர்
திருமார் பன் "மனுதர்மம்"பற்றியும் கருத்தரங்க உரையாற்றினர்.
கழகப்
பொதுச்செயலாளர் துரை சந்திரசேக ரன் சிறப்புரையாற்றினார். மேல்பட்டாம்பாக்கம் ரமேஷ் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்மையில் கழக சார்பில் வெளியிடப்பட்ட மூன்று நூல்களை தோழர்கள் பெற்றுக் கொண்டனர். முடிவில் மாதவன் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்ட அமைப் பாளர் மணிவேல், மாவட்ட மகளிரணி அமைப் பாளர் முனியம்மாள் தமிழ்மணி, கலைச்செல்வி, வழக்குரைஞர்அழகரசன், மாவட்ட ப.க. செயலாளர்
தமிழன்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமநாதன், ப.க. மாவட்ட
செயலாளர் பெரியார்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment