சென்னை, ஜன. 4- அறிவு வழி வாசகர் காணொலி நிகழ்ச்சியின் 131ஆவது நிகழ்வாக ஆண்டின் இறுதி நாளான 31.12.2020 அன்று இரவு 8 மணி அளவில் “திராவிடர் கழகம் 2020” என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது.
காணொலியில்
கலந்து கொண்ட அனைவரையும் திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் வரவேற்று உரை நிகழ்த்தினார். தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலை
வகித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
செய்யாறு
கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட் ராமன்
தலைமை வகித்து உரையாற் றுகையில்: 1989ஆம் ஆண்டு நண் பர் வே.சிறீதர் அவர்களுடன்
பெரியார் திடலில் பணியில் சேர்ந்து, போட்டோ சிவக்குமார், நெல்லுப்பட்டு இராம லிங்கம் மற்ற பிற தோழர்களுடன் ஆசிரியர் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டது. பெரியார் திடலில் தொண்டூழியம் செய்த சான்றோர் பெருமக்களிடம் பழகியது, தமிழர் தலைவர் ஆசிரியர் 88 வயதிலும் இளைஞரைப் போன்று சுறுசுறுப் பாக காணொலி வாயிலாக நிகழ்ச் சிகளை நடத்துவது, தமிழகம், இந் திய அளவில் ஒவ்வொரு அரசியல் அசைவுகளையும் மக்களுக்கு தெரிவிப்பது, நாள்தோறும் அறிக்கை கள், வாழ்வியல் கட்டுரைகள் 2020ஆம் ஆண்டு சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை
எழுச்சித் தமிழருக்கு வழங்கி, பாராட்டி உரையாற்றியது - ஆகியவைகளைப் பற்றி எடுத்துரைத்து - தமிழர் தலை வர் விடுத்த ஆங்கிலப் புத்தாண்டு செய்தியை சொல்லி தனதுரையை நிறைவு செய்தார்.
பார்த்ததும்,
படித்ததும், பகிர் வதும் என்ற தலைப்பில் அறிவு வழி வாசகர் காணொலி இயக்கத்தின் இயக்குனர் பழ.சேரலாதன் தனது
ரையில்: உளவியல் கருத்துக்களை மிகச்சிறப்பாக எடுத்துரைத்து மனி தருக்கு இதயம், நுரையீரல், சிறுநீர கம் போன்ற உடல் உறுப்புக்களின் முக்கியத்துவத்தையும் அதன் பாது காப்பையும் மருத்துவரீதியாக எடுத்துரைத்தார்.
நிகழ்வில்
தகடூர் தமிழ்ச்செல்வி, வேலூர் மண்டல தலைவர் வி.சட கோபன்,
சோம.வேலாயுதம், வேட் டவலம் பட்டாபிராமன், செய் யாறு பொறியாளர் தி.காமராசன் மற்றும்
பலர் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
2021ஆம்
ஆண்டு ஆங்கிலப் புத் தாண்டு வாழ்த்துச் செய்திகளையும், கழகப் பாடல்களைப் பாடி அதன் கருத்துகளையும் எடுத்துரைத்தனர். நிகழ்வு இரவு 8 மணி ஆரம்பித்து நள்ளிரவு 12.30 மணி அளவில் 2021 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment