ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 3, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

· காஷ்மீரில் அரங்கேறியுள்ள அடக்குமுறைச் சட்டங்கள் குறித்து பரூக் அப்துல்லா தலைமையிலான குப்கார் கூட்டணி நூல் வெளியிட .ஜி. நூராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

· மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாய அமைப்புகள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், வருகிற ஜனவரி 26-ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் ஊர்வலம் டில்லியில் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· பஞ்சாப் விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தையில் விற்றால் விற்றுக் கொள்ளட்டும். அதே போன்று, பீகாரில் குறைந்த பட்ச ஆதார விலையான ரூ.1850-க்குப் பதிலாக வெளிச் சந்தையில் தற்போது ரூ.800-க்கு விற்க வேண்டியுள்ளது என்றால் அதனை அவர்கள் செய்து கொள்ளட்டும். இதில் மத்திய அரசு ஏன் மாநில அரசின் அதிகாரத்திற்குள் நுழைய வேண்டும் என .சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

· இப்போது முடிவடைந்த ஆண்டில் இந்தியாவில் மோசமான அடிப்படையில் மோசமான மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டது.  சீன பிளேக் காரணமாக 2020 உலகிற்கு ஒரு பயங்கரமான ஆண்டாக இருந்தது என்றால், தொற்றுநோயுடன் எந்த தொடர்பும் இல்லாத காரணங்களுக்காக இந்தியாவுக்கு மிகவும் பயங்கரமான ஆண்டாக இருந்தது என மூத்த பத்திரிக்கையாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

· நவம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து குறைந்தது 50 விவசாயிகள் இறந்ததற்கு அரசாங்கத்தில் யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று போராடும் விவசாயிகள் கூறியுள்ளனர். எங்களது கோரிக்கையை அரசு ஏற்கட்டும் அல்லது தனது அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி எங்களை வெளியேற்றட்டும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· பீகாரில் விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தை ஒழித்தது. ஆனால், அது விவசாயிகளுக்குப் பலனளிக்காமல் நட்டத்தைத் தந்துள்ளது. நெல், கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆகிய மூன்று முக்கிய பயிர்களுக்கு பண்ணை அறுவடை விலைகள் மற்றும் எம்.எஸ்.பி இடையே உள்ள இடைவெளி விரிவடைந்துள்ளது அல்லது ஒரே அளவில் உள்ளது என அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

- குடந்தை கருணா

3.1.2021

No comments:

Post a Comment