ஈரோடு மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உறுதி
ஈரோடு,ஜன.4- தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
அவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு “அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்”
என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
ஈரோடு
மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தளபதி மு.க.ஸ்டாலின்
நேற்று (3.1.2021) காலை ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரவலசு ஊராட்சி, வி.மேட்டுப்பாளையம் கிராமத்தில் நடந்த
மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.
இந்த
கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின்
பேசியதாவது: தி.மு.க.வின் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளனர். எனவே இதை கூட்டம் என்பதை விட கிராம பெண்கள் மாநாடு என்று தான் கூற வேண்டும். நாங்கள் பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்போம், என்பதற்கு அடையாளம்தான் இந்த கூட்டம். இதுவரை நான் கலந்து கொண்ட கிராம சபை கூட்டங்களை எல்லாம் மிஞ்சக்கூடிய அளவில் இக்கூட்டம் உள்ளது. பெண்களிடம் பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. பெண்கள் முடிவெடுத்துவிட்டால் சாதித்து காட்டிவிடுவார்கள். இன்னும் 4 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.
கலைஞர்
ஆட்சிக் காலத்தில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச மின்சாரம் கொண்டு வந்ததும் கலைஞர் ஆட்சியில்தான். ஏற்கெனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. மருத்துவமனை இருந்தால் மருத்துவர்கள் இருப்பதில்லை. மருத்துவர்கள் இருந்தால் மருந்துகள் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் 'மினி கிளினிக்'குகள் திறக்கப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றுவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் என எதுவும் இல்லை.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பவர்கள்தான் இங்கு வந்து பணியாற்றுவார்கள் என்று அரசு கூறுகின்றது. செந்தில்-கவுண்டமணி வாழைப்பழ காமெடி போல 'மினி கிளினிக்' நடக்கிறது.
பஞ்சு
விலை உயராத நிலையில், நூல் விலை மட்டும் உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளித்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் பதுக்கல் தான் காரணம் என்று கூறுகின்றனர். தி.மு.க.
ஆட்சி அமைந்ததும் நூல் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
100 நாள்
வேலைத்திட்டத்தில் முறையாக ஊதியம் கொடுப்பதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததும், 100 நாள் திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். மேலும் கூலியை அன்றைக்கே, அதே இடத்தில் வழங்கும் சூழலை நிச்சயம் உருவாக்கித் தருவோம். ஓய்வூதியம் தி.மு.க.
ஆட்சியில் கட்சி பாகுபாடின்றி வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு
மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதேபோல மாணவர்கள் கல்விக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. குடிநீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ரூ.6 லட்சம் கோடியை தமிழகத்தின் கடனாக உருவாக்கி வைத்துள்ளனர். கல்வி, சுகாதாரம், சமூக நீதி பறிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பெருமைகளை எல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கிற இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால், நீங்கள் எல்லாம் தி.மு.க.வை வருகின்ற தேர்தலில்
ஆதரிக்க வேண்டும். இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின்
பேசினார்.

No comments:
Post a Comment