சென்னை,பிப்.25- அகில இந்திய பிற்படுத் தப்பட்ட வகுப்புப் பணியாளர் நல சங்கங் களின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக் கைகளை வலியுறுத்தி 27.2.2021 அன்று காலை 11 மணிக்கு, கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ‘ஆர்ப்பாட்டம்’ நடைபெற உள் ளது.
கோரிக்கைகள்: கிரிமிலேயர் முறையை நீக்கப்பட வேண்டும், ஜாதிவாரி கணக் கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி அமைச்சகம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, ஓபிசி பிரிவினர்க்கு 52 சதவீதம் இட ஒதுக்கீடு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங் களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும். நீதித்துறை மற்றும் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு நிறை வேற்றிட சட்டம் இயற்றிட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பின் செயல் தலைவர் ஜே.பார்த்தசாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங் கோவன், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் தலைவர்கள் உரை யாற்றுகிறார்கள்.
No comments:
Post a Comment