கேரள, மராட்டிய மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

கேரள, மராட்டிய மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,பிப்.25- கேரளா, மகாராட்டி ராவில் இருந்து தமிழகம் வருவோர் கட் டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளி யிட்டுள்ளது.

அவை வருமாறு: வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கரோனா சோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்குள் கரோனா பரிசோதனை செய்து முடிவுகளை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவை <www.newdelhiairport.in> என்ற தளத்தில் அப்லோட் செய்திருக்க வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து வருப வர்களுக்கு அறிகுறி இருந்தால் கரோனா சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஒரே தெருவில் 3 வீடுகளில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. 14 நாட்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக் கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள் ளப்படும்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை திடீரென அதி கரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கரோனா பரவலை கட்டுப் படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது.

No comments:

Post a Comment