உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவல் டில்லிக்குள் செல்ல 5 மாநிலத்தவருக்கு கட்டுப்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவல் டில்லிக்குள் செல்ல 5 மாநிலத்தவருக்கு கட்டுப்பாடு

புதுடில்லி,பிப்.25 மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது.

இதனால் அந்தந்த மாநிலங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. டில்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மராட்டியம், கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தவருக்கு டில்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டில்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். இம்மாதம் 26ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும்என தெரிவித்துள்ளது.

 

19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-51 

28-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

சென்னை, பிப்.25 இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக, 19 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-51 ஆந்திரா வின் சிறீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வருகிற 28-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத் தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத் தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வருகிற 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.24 மணிக்கு, வானிலை நிலைமை களுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படும். இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.

இதில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற் கைகோளான அம சோனியா-1 என்ற செயற்கைகோள் முதன்மை செயற்கைகோளாகும். அதனு டன், இந்தியாவைச் சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் தொகுப்பைச் சார்ந்த 3 செயற்கை கோள்கள், ஒரு சதீஷ்தவான் சாட், இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கை கோள்கள் உள்பட 19 செயற்கை கோள்கள் ஏவப்படுகின்றன. இவ்வாறுஇஸ்ரோவிஞ்ஞானிகள் கூறினர்.

No comments:

Post a Comment