சிவகாசி அருகே மீண்டும் பயங்கரம் பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் கருகி உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

சிவகாசி அருகே மீண்டும் பயங்கரம் பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் கருகி உயிரிழப்பு

சிவகாசி, பிப். 26- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல், ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன் (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ளது.

இந்த ஆலையில் 'பேன்சி ரக' பட்டா சுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த ஆலை யில் நேற்று (25.1.2021) மாலை 4.30 மணி யளவில், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற் பட்டது. அடுத்தடுத்த கட்டடங்களுக்கு தீ பரவத்தொடங்கியது. இதனால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெடி விபத்தில் 15 கட்டடங்கள் தரைமட்ட மாகின. இதில், படுகாயமடைந்த 19 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசி அருகே எலியார் பட்டியை சேர்ந்த வீரராஜ் மனைவி செல்வி (37) என்பவர் மட்டும் அடை யாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர்கள் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

இந்நிகழ்வுகுறித்து எம்.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பட்டாசு  தொழிற்சாலை உரிமையாளர் தங்கராஜ்பாண்டியன் மற்றும் மேலாளர் ஜெயபால் ஆகிய 2  பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்விடத்தை விருதுநகர்  எஸ்.பி. பெருமாள், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன்  மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை  நடத்தினர். சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து நடக் கும் பட்டாசு ஆலை விபத்துகள் இப் பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment