சென்னை,பிப்.26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று (26.2.2021) விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக அரசியலில் அறுபது ஆண்டு களைக் கடந்து ஒளிவீசிய சிவப்பு நட்சத் திரம் உதிர்ந்து விட்டது. இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பி னர், மதிப்புமிக்க மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்களைக் காலம் பறித்துக் கொண்டது. 26.02.2021 காலை
9.58 மணிக்கு சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் கால மானார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் பகுத்தறிவு, மூடநம்பிக் கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னிலைப் படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவ ருடையது. மதவெறி, வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என அண்மையில் மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூர் மையான எதிர்ப்பாளரான அவர், போருக்கு எதிரான, உலக மக்களிடையே ஒப்புரவுக்கான இயக்கங்களை நடத்தி தலைமை தாங்கியவர்.
இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, ஜாதி, மத பிளவுகளை விரிவுப் படுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தை சீர ழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டி யனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்து விட் டது.
தோழர் தா.பாண்டியன் அவர்களது திருப்பெயர் என்றென்றும் நிலைக் கட்டும்!
தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி! செவ்வணக்கம்!
No comments:
Post a Comment