உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
புதுடில்லி,பிப்.26- பிற்படுத்தப் பட்ட சமூகத்தினரை முன்னேற் றவே, தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை செய்யப் பட்டுள்ளது,’ என உச்சநீதிமன்றத் தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையே பின்பற்றப் படுகிறது. இந்நிலையில், சென் னையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ‘மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட பல விவகாரங்களில் இதர பிரிவை (ஓசி) சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்க வில்லை. அதனால், தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக குறைக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய் யும்படி மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி, பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ‘மாநில அரசுகள் பின்பற்றும் இடஒதுக்கீடு முறை களில் மத்திய அரசு தலையிடாது,’ என தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசும் நேற்று (25.2.2021) தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.
அதில், ‘தமிழகத்தில் ஜாதி வாரி யாக கணக்கு எடுத்த பின்னர்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டது. அதற்கு, குடிய ரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை முன்னேற்ற வேண்டும் எனபதற் காகத்தான் தமிழகத்தில் 69சதவீத இடஒதுக்கீடே அமல்படுத்தப்பட் டுள்ளது. அதனால், இதற்கு எதி ரான அனைத்து மனுக்களையும்
தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment