படிப்புதான் முக்கியம் - திருமணமல்ல மணமகள் புரட்சி - திருமணம் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

படிப்புதான் முக்கியம் - திருமணமல்ல மணமகள் புரட்சி - திருமணம் தடை

திருவண்ணாமலை, பிப்.26 திரு வண்ணாமலை மாவட்டம் கண்ண மங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அய்.டி.அய். முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவருக் கும் வேலூர் மாவட்டம் அணைக் கட்டு தாலுகா வேலங்காடு பகு தியை சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் திருமணம் நேற்று  (25.2.2021) காலை கண்ணமங்கலத் தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்புடன், விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று மண மக்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்தனர். மணமக ளுக்கு அலங்காரம் செய்ய சென்ற போது நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.

இதைக்கேட்டு இருவீட்டாரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந் தனர். அவர்கள் மணப்பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் மண மகள் விடாப்பிடியாக திருமணத் திற்கு மறுத்துவிட்டார்.

இதனால் மணமகனின் பெற் றோர், உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி அறி யாத உறவினர்கள் சிலர் திருமணத் திற்காக மண்டபத்துக்கு வந்தனர். அப்போது திருமணம் நின்றது குறித்து தெரிந்த உடன் அவர்களும்  திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment