தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி

துறைமுகம் பகுதியில் 'நீதி அரங்கம்': தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் துவக்கி வைக்கிறார்!

நீதியரசர்கள் ஜி.எம்.அக்பர் அலி - சி.டி.செல்வம் - .கே.ராஜன் சிறப்புரை!

சென்னை கிழக்கு மாவட்டம் - துறைமுகம் பகுதியில் தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (26.2.2021)  மாலை 6 மணியளவில் பாரிமுனை - ராஜா அண்ணாமலை மன்றத்தில்நீதி அரங்கம்எனும் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந் நிகழ்ச்சிக்கு தி.மு.. பொதுக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், கிழக்கு மாவட்ட தி.மு.. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல். ., சட்டமன்ற உறுப்பினர்கள் .ரங்கநாதன், .தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி தி.மு.. பொறுப்பாளர்கள் எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நீதி அரங்கத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் துவக்கி வைக்கிறார்.

இக்கருத்தரங்கில் நீதியரசர்கள் ஜி.எம்.அக்பர் அலி, சி.டி.செல்வம், .கே.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

59-ஆவது வட்ட தி.மு.. செயலாளர் மே.ஜனார்த்தனன் நன்றி கூறுகிறார்.

No comments:

Post a Comment