திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமம், வெ. சித்தார்த்தன், வெ. ரஷ்யா ஆகியோரின் தகப்பனார், ஜாதியை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்து சிறை சென்ற மாவீரர், பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி. வெங்கடாசலம் (வயது 86) அவர்கள் இன்று (26.2.2021) விடியற்காலை மறை வுற்றார் என்பதறிந்து வருந்துகி றோம்.
ஜாதி ஒழிப்புக் களத்தில் களம் கண்ட வீரர்களில் வயது மூப்புக் காரணமாக எஞ்சியுள்ள சிலரும் ஒருவர் பின் ஒருவராக மறைவது வேதனைக்குரியது.
பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வெங்கடாசலம் அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26-2-2021

No comments:
Post a Comment