சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கில் உரிமைக் குழுவின் தாக்கீதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 10, 2021

சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கில் உரிமைக் குழுவின் தாக்கீதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,பிப்.10- தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி, அவற்றை தி.மு.., உறுப்பினர்கள் அவைக் குள் கொண்டு சென்றனர்.

இவர்களது செயல் உரிமை மீறல் என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் மு..ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.., உறுப்பினர்களுக்கு உரிமை குழு தாக்கீது அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த தாக்கீதை ரத்து செய்தது. விதிமுறைகளை பின்பற்றி புதிய நோட்டீசை அனுப்ப விரும் பினால், அனுப்பலாம் என்றும் உத்தர விட்டது.

இதன்படி மு..ஸ்டாலின் உள்ளிட்டோ ருக்கு புதிய தாக்கீதை உரிமை குழு மீண்டும் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு..ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.., சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத் திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (10.2.2021) நீதிபதி பிறப்பிப்பார் என்ற தெரி விக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நீதிபதி புஷ்பா சத்தியநாரா யணா இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்தார்.

அதில், உரிமை குழுவின் தாக்கீதை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், உரிய காரணங்களின்றி சட்டப்பேரவைத் தலைவர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட் டுமே தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment