மத்திய பா.ஜ.க. ஆட்சிபற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரை
புதுடில்லி. பிப். 12 “நாம் இருவர் நமக்கு இருவர்! இவர்கள் யார்? நாம் இருவர் என்பது பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா! நமக்கு இருவர் என்பது அதானி-- அம்பானி!!'' என்று மத்திய பா.ஜ.க. ஆட்சிபற்றி நாடாளு மன்றத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார்.
பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி 70 நாள்களுக்கும் மேலாக டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந் தும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே, போராட்டம் மேலும் தொடர உள்ளது.
ராகுல் உரை
இன்று (12.2.2021) மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர் மானத்தின் விவாதத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர்மீதான, இந்த 3 வேளாண் சட்டங்களும் வேளாண் துறைக்கு ஊக்கமளிக்க கொண்டு வரப்பட்டதாகவும், இதற்கு காங்கிரஸ் கட்சி தவறான வண்ணம் பூசி விமர்சனம் செய்து பொய்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட் டினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இதற்குப் பதிலாக, “நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு எவ் வித நன்மையும் இல்லை. தனது விளை பொருட்களில் விலையை நிர்ணயிக்க விவசாயிகள் தொழிலதிபர்கள் முன்பு நிற்கும் நிலை வரும். இந்த வேளாண் சட்டங்களில் 2 ஆம் சட்டம் விளை பொருட்கள் பதுக்கலை ஊக்குவிக்கும். இதனால் விளை பொருட்கள் குடோன்களில் அழுகும் நிலை உண்டாகும். அரசின் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் முன்பு ‘நாம் இருவர் நமக்கு இருவர்' என இருந்தது. இப்போது அது வேறு வடிவில் மாறியுள்ளது. தற்போது 4 பேர் இந்தியாவை வழி நடத்துகின்றனர். அவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். “நாம் இருவர் நமக்கு இருவர்! இவர்கள் யார்? நாம் இருவர் என்பது பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா! நமக்கு இருவர் என்பது அதானி-- அம்பானி!!'' இந்த நாட்டை ஆளும் அந்த 4 பேர் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன'' எனக் கூறினார்.
பசி - வேலையின்மை - தற்கொலை!
மேலும் அவர், ‘‘பிரதமர் இந்த பிரச்சினைக்கு 3 தேர்வுகளை அறிவித்துள்ளதாக சொல்கிறார். மூன்று தேர்வுகள் ‘‘பசி, வேலை இன்மை மற்றும் தற்கொலை ஆகியவையே ஆகும்'' எனக் கூறினார். இதையடுத்து பாஜக உறுப்பி னர்கள் கடும் கூச்சல் மற்றும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச் சருக்கு பதிலளித்த ராகுல்காந்தி, லடாக்கில், இந்திய - சீன துருப்புகளிடையே ஏற்பட்ட மோதலுக்கு முன்னதாக இருந்த நிலை மீண்டும் திரும்பாமல், அமைதி ஏற்படுவதற்கு சாத்தியமில்லை. தற்போது, ஏரிக்கு அருகில், ராணுவ நடமாட்டங்களை ரத்து செய்வது என்ற உடன்பாட்டிற்கு இந்தியா ஒத்துக் கொண்டிருப்பதன் மூலம், வீரர்கள் செய்த உயிர் தியாகத்தை மோடி அரசு அவமதிக்கிறது மற்றும் இந்தியப் பகுதியை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கிறது என்றும் அவர் குற்றம் சாட் டினார்.

No comments:
Post a Comment